எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்கும் போது 2 பேர் உயிரிழப்பு

0
28

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்​கும் ​போது அருண் குமார் திவாரி, சந்​தீப் அரே என்ற 2 இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​தனர். உலகின் மிக உயரமான எவ ரெட்ஸ் சிகரத்தை சந்​தீப் அரே புதன்​கிழமை​யும் அருண் குமார் திவாரி வியாழக்​கிழமை மாலை​யும் அடைந்​துள்​ளனர்.

பின்னர் கீழே இறங்​கும்​போது 4 ஷெர்பா வழி​காட்​டிகளின் உதவி​யுடன் வந்​து​ கொண்​டிருந்த திவாரி ‘ஹிலாரி ஸ்டெப்’ பகு​திக்கு அருகே உயி​ரிழந்​தார். சந்​தீப் அரே உடல்​நலக் குறைவுக்கு பிறகு ஷெர்பா மீட்​புக் குழு​வின​ரால் கீழே கொண்​டு​வரப்​பட்ட நிலை​யில் உயி​ரிழந்​த​ார்.

21 வயதான சானிகா ஷா மற்​றும் எல்​லைப் பாது​காப்பு படை​யின் அனைத்து பெண் மலை​யேற்​றக் குழு​வினர் உள்​ளிட்ட பல இந்​தி​யர்​கள் வெற்​றிகர​மாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்​த நிலை​யில் இந்த மரணங்​கள் நிகழ்ந்​துள்​ளன.

இந்த ஆண்டு மலை​யேற்​றப் பரு​வம் தொடங்​கிய பிறகு நேபாளத்​தின் தெற்கு அடி​வார முகாமில் இருந்து சாதனை அளவாக 274 மலை​யேற்ற வீரர்​கள் புதன்​கிழமை ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்​துள்​ளனர்.

இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள அதிகாரி கள் 493 அனுமதிகளை வழங்கி யுள்ள நிலையில் இது சாதனை ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1953-ல் டென்சிங் நார்கே, சர் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்ததிலிருந்து, ஒரே ஆண்டில் வழங்கப்பட்ட அதிகபட்ச அனுமதி இதுவாகும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here