FIFA WC 2026: ஜெர்மனி கால்பந்து அணியில் மானுவல் நோயர்

0
22

 பிஃ​பா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, மெக்​சிகோ, அமெரிக்கா ஆகிய நாடு​களில் நடை​பெறுகிறது. இந்​தத் தொடரில் பங்​கேற்​கும் 26 பேர் கொண்ட ஜெர்​மனி அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது.

இதில் 40 வயதான நட்​சத்​திர கோல் கீப்​ப​ரான மானுவல் நோயர் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். சீனியர் வீர​ரான மானுவல் நோயர் கடந்த 2024-ம் ஆண்டு ஐரோப்​பிய சாம்​பியன்​ஷிப் கால்​பந்து தொடருடன் ஓய்வு பெற்​றிருந்​தார்.

ஆனால் உலகக் கோப்பை தொடருக்​காக ஜெர்​மனி அணி​யின் பயிற்​சி​யாளர் ஜூலியன் நாகல்​ஸ்​மான் மானுவல் நோயரை ஓய்​விலிருந்து மீண்டு வந்து விளை​யாட சம்​ம​திக்க வைத்​துள்​ளார். மானுவல் நோயர் ஜெர்​மனி அணிக்​காக 124 போட்​டிகளில் விளை​யாடி உள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here