பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் சிஎஸ்கே – மீண்டும் லக்னோ அணியுடன் மோதல்

0
25

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி​யுடன் மோதுகிறது.

ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி 11 ஆட்டங்களில் விளை​யாடி 6 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 12 புள்ளிகள் பெற்று பட்​டியலில் 5-வது இடத்​தில் உள்​ளது. பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற வேண்​டு​மா​னால் இன்​றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் சிஎஸ்கே அணி களமிறங்​கு​கிறது.

ஆட்​டத்தை வெற்​றிகர​மாக முடிப்​ப​தற்​கான அதிரடி வீரர்​கள் போதிய அளவில் இல்லை என்ற விமர்​சனங்​கள் அடிக்​கடி எழுந்​த​போ​தி​லும் சஞ்சு சாம்​சன், உர்​வில் படேல், ருது​ராஜ் கெய்க்​வாட், கார்த்​திக் சர்​மா, பிர​சாந்த் வீர் ஆகியோரது பங்​களிப்​பு​கள் மூலம் சிஎஸ்கே அணி போராட்ட குணத்தை வெளிப்​படுத்​தி​யுள்​ளது.

உர்​வில் படேலின் அச்​சமற்ற அணுகு​முறை, பவர்ப்ளே ஓவர்​களில் சிஎஸ்​கே-வுக்​குத் தேவை​யான வேகத்​தைச் சேர்த்​துள்​ளது. கடைசியாக லக்னோ அணிக்கு எதி​ராக சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் உர்​வில் படேல் 13 பந்​துகளில் அரை சதம் அடித்து மிரட்​டி​யிருந்​தார். அந்த ஆட்​டத்​தில் அவர், 23 பந்​துகளில், 8 சிக்​ஸர்​களு​டன் 65 ரன்​கள் விளாசி​யிருந்​தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்​டைவீச்சு வெளிப்​படக்​கூடும்.

இது ஒரு​புறம் இருக்க நடப்பு சீசனில் ஷிவம் துபே, டெவால்ட் பிரேவிஸ் ஆகியோரிடம் இருந்து தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. லக்னோ ஆடுகளம் பேட்​டிங்​கிற்கு சாதக​மாக இருக்​கும் என கணிக்கப்பட்டுள்​ளது. இதனால் அவர்​கள் இரு​வரும் மட்​டையை சுழற்​று​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும்.

ஆல்​ர​வுண்​ட​ரான ஜேமி ஓவர்​டன் தொடை பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக விலகி உள்​ளது சிஎஸ்கே அணிக்கு சற்று பின்னடைவை ஏற்​படுத்​தக்​கூடும். ஏனெனில் நடப்பு சீசனில் அவர், நடு ஓவர்​களில் பந்து வீச்​சில் சிறப்​பாக செயல்பட்டிருந்தார். 10 ஆட்​டங்​களில் 14 விக்​கெட்​களை கைப்பற்றி​யிருந்​தார். முக்​கிய வீரர்​கள் காயங்​களால் அவதிப்பட்ட சூழ்​நிலைகளில் முகேஷ் சவுத்​ரி, அன்​ஷுல் கம்போஜ் ஆகியோர் தங்​களுக்​குக் கொடுக்​கப்​பட்ட பணியைச் சரி​யாகச் செய்​துள்​ளனர்.

ஆப்​கானிஸ்​தானின் இடது கை சுழற்​பந்து வீச்​சாளர் நூர் அகமது, மேற்கு இந்​தி​யத் தீவு​களின் அகில் ஹோசைன் ஆகியோ​ரும் தங்களது பங்​கிற்​குத் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளனர். இன்​றைய ஆட்​டத்​தில் ஜேமி ஓவர்​ட​னுக்கு பதிலாக ஸ்பென்​சர் ஜான்​சன் களமிறக்​கப்பட வாய்ப்பு உள்​ளது. ரிஷப் பந்த் தலை​மையி​லான லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி ஏற்​கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​து​விட்​டது.

அந்த அணி 11 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 8 தோல்விகளுடன் 6 புள்​ளி​கள் பெற்று கடைசி இடத்​தில் உள்​ளது. எஞ்​சி​யுள்ள ஆட்​டங்​களில் ஆறு​தல் வெற்றி பெறு​வ​தில் அந்த அணி கவனம் செலுத்​தக்​கூடும். கேப்​டன் ரிஷப் பந்த் பார்​மின்றி தவிப்​பது அணி​யின் செயல் திறனை வெகு​வாக பாதித்​துள்​ளது. அதே சமயம், அந்த அணி​யின் பந்​து​வீச்​சாளர்​களும் இலக்​கைத் தற்​காப்​ப​தற்கோ அல்​லது முக்​கிய​மான கட்​டங்​களில் எதிரணி பேட்​டர்​களைக் கட்​டுப்​படுத்​தவோ தடு​மாறி வரு​கின்​றனர்.

சிஎஸ்​கேவுக்கு எதி​ராக சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 203 ரன்​களை குவித்த போதி​லும் லக்னோ அணி​யால் வெற்​றியை வசப்​படுத்த முடி​யாமல் போனது. ஜோஷ் இங்​லிஷ், நிகோலஸ் பூரன், மிட்​செல் மார்ஷ் ஆகியோரிடம் இருந்து நிலை​யான செயல்திறன் வெளிப்​பட​வில்​லை. இதில் ஜோஷ் இங்​லிஷ் கடந்த ஆட்​டத்​தில் 33 பந்​துகளில் 85 ரன்​கள் விளாசி​யிருந்​தார். அவரிடம் இருந்து மேலும்​ ஒரு சிறந்​த செயல்​ திறன்​ வெளிப்​படக்​கூடும். லக்னோ ஏகானா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.

சிஎஸ்கேவில் டியான் ஃபாரெஸ்டர்

சிஎஸ்கே அணி​யில் இடம் பெற்​றிருந்த ஆல்​ர​வுண்​ட​ரான இங்கிலாந்​தின் ஜேமி ஓவர்​டன் காயம் காரண​மாக ஐபிஎல் தொடரின் எஞ்​சிய ஆட்​டங்​களில் இருந்து வில​கி​யுள்​ளார். இந்​நிலை​யில் அவருக்கு பதிலாக தென் ஆப்​பிரிக்க ஆல்​ர​வுண்​ட​ரான டியான் ஃபாரெஸ்​டரை ரூ.75 லட்​சத்​துக்கு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது சிஎஸ்கே அணி.

மிதவேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான டியான் ஃபாரெஸ்​டர், கடந்த மார்ச் மாதம் தென் ஆப்​பிரிக்க டி 20 அணி​யில் அறிமுகமாகி இருந்​தார். இது​வரை 5 சர்​வ​தேச டி 20 போட்​டிகளில் விளை​யாடி உள்ள அவர், 83 ரன்​கள் சேர்த்​துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here