கேரள முதல்வராக வேணுகோபாலை நியமிக்க எதிர்ப்பு – போஸ்டர்கள் மூலம் எச்சரிக்கை

0
17

கேரள முதல்​வ​ராக கே.சி.வேணுகோ​பாலை நியமித்தால், வயநாடு அமே​தி​யாக மாறும் என்ற வாசகங்​கள் அடங்​கிய போஸ்​டர்​கள் வயநாடு தொகு​தி​யில் ஒட்​டப்​பட்​டுள்​ளன.

கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், காங்கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி வெற்றி பெற்​றது. இதன்​மூலம் 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு இக்​கூட்​டணி ஆட்​சி​யைக் கைப்​பற்றி உள்​ளது. தேர்​தல் முடிவு வெளி​யாகி 10 நாட்​களாகி​யும் இன்​னும் முதல்​வரை தேர்ந்​தெடுப்​ப​தில் இழுபறி நீடிக்​கிறது. குறிப்​பாக, கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், மூத்த தலை​வர்​களான வி.டி.சதீசன், ரமேஷ் சென்​னி​தாலா ஆகியோ​ருடைய பெயர்​கள் முதல்​வர் பதவிக்கு பரிசீலிக்​கப்​பட்​டன.

இதில் கே.சி.வேணுகோ​பாலை முதல்​வ​ராக நியமிக்க கட்​சித் தலைமை விரும்​புவ​தாகக் கூறப்​படு​கிறது. இதற்கு ரமேஷ் சென்​னி​தாலா மற்​றும் சதீசனின் ஆதர​வாளர்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதையடுத்​து, கேரள முதல்​வர் பதவிக்​கான போட்​டியை ஆதர​வாளர்​களுக்கு இடையி​லான மோதலாக மாற்ற வேண்​டாம் என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி எச்​சரிக்கை விடுத்​தார். ஆனால், இதை யாரும் பொருட்​படுத்​த​வில்​லை.

கே.சி.வேணுகோ​பாலை முதல்​வர் பதவிக்​குத் தேர்ந்​தெடுக்க வேண்​டாம் என்று ராகுல் மற்​றும் பிரி​யங்கா காந்​தியை எச்​சரிக்​கும் போஸ்​டர்​கள், பிரி​யங்கா காந்​தி​யின் தொகு​தி​யான வயநாட்​டில் ஒட்​டப்​பட்​டுள்​ளன. “மிஸ்​டர் ராகுல், கே.சி. (வேணுகோ​பால்) உங்​கள் பையைத் தூக்​குபவ​ராக இருக்​கலாம், ஆனால் கேரள மக்​கள் உங்​களை ஒரு​போதும் மன்​னிக்க மாட்​டார்​கள்” என்று ஒரு போஸ்​டரில் எழுதப்​பட்​டுள்​ளது. “வய​நாடு அடுத்த அமே​தி​யாக மாறக்​கூடும்” என்று மற்​றொரு போஸ்​டரில் எழுதப்​பட்​டுள்​ளது.

உத்​தரபிரதேசத்​தின் அமேதி தொகுதி காந்தி குடும்​பத்​தின் கோட்​டை​யாக இருந்​தது. இந்​நிலை​யில், 2019-ல் நடந்த மக்​கள​வைத் தேர்​தலில் இந்​தத் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட ராகுல் காந்​தி​யைத் தோற்​கடித்து பாஜக​வின் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்​றார். இதை நினை​வு​கூரும் வகை​யில்​தான் இந்த போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டுள்​ளன. உயரிய பதவி தவிர வேறு எதை​யும் ஏற்​கப் போவ​தில்லை என்று சதீசன் தெளிவுபடுத்​தி​யுள்​ளார். இது கட்​சித் தலை​மைக்கு இக்​கட்​டான சூழ்​நிலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here