பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர், தமிழில் அசுரன், துணிவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், கேரளாவில் ரகசியமாகக் குதிரையேற்ற பயிற்சி பெற்றுள்ளார்.
எர்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து பைக்கில் அதிகாலையில் ஆலுவா சென்ற அவர் அங்கு ஆற்றங்கரையோர மைதானத்தில் குதிரையேற்ற பயிற்சி பெற்றுள்ளார். இதை ஜார்ஜ் டயஸ் என்ற பயிற்சியாளர் அவருக்கு ‘லாரா’ என்ற குதிரையில் இப்பயிற்சியை அளித்துள்ளார். மக்கள் கூடுவதற்கு முன் அங்குச் சென்றுவிடும் மஞ்சு வாரியர், ஒரு மாதமாகத் தினமும் 2 மணி நேரம் இப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
ஆட்கள் நடமாட்டம் அங்கு வருவதற்கு முன்பு அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். ஒரே வாரத்திலேயே அவர் இப்பயிற்சியைச் சிறப்பாகக் கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. நடிகர்கள் சன்னி வெய்ன், சிஜு வில்சன், தயாரிப்பாளர் பினீஷ் சந்திரன் ஆகியோரும் இப்பயிற்சியின் போது கலந்துகொண்டுள்ளனர். எந்தப் படத்துக்காக அவர் குதிரையேற்ற பயிற்சி பெற்றார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.















