போலந்தின் வர்சா நகரில் கிராண்ட் செஸ் டூரின் சூப்பர் ரேப்பிடு மற்றும் பிளிட்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் ரேப்பிடு பிரிவின் கடைசி சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருணாவுடன் மோதினார்.
இதில் 49-வது நகர்த்தலின் போது குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், 9 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ரேப்பிடு பிரிவு போட்டி முடிவடைந்துள்ள நிலையில் 18 சுற்றுகள் கொண்ட பிளிட்ஸ் பிரிவு போட்டி நடைபெற உள்ளது.















