போதைப் பொருள் தடுப்பு சோதனையில் ஜம்மு – காஷ்மீரில் 500 பேர் கைது

0
23

ஜம்மு- காஷ்மீரில் ‘போதைப் பொருள் இல்லாத ஜம்மு- காஷ்மீர் அபியான்’ திட்டத்தின் கீழ், போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக போதைப் பொருள் தடுப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் காஷ்மீர் மண்டலத்தில் ரூ.12.66 லட்சம் மதிப்பிலான 6 அசையும் சொத்துகளும், ரூ.7.77 கோடி மதிப்பிலான 14 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டன.

ஜம்மு மண்டலத்தில் ரூ.1.36 கோடி மதிப்பிலான 22 அசையும் சொத்துகளும், ரூ.5.54 கோடி மதிப்பிலான 9 அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும்,537 கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 502 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here