“முதல்வரின் தோல்வி மனதை பிசைகிறது” – மாரி செல்வராஜ் வருத்தம்

0
29

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி  மனதை பிசைகிறது என இயக்குநர் மாரி செல்வராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெருவலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி  மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. 

தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் விஜய்க்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்” இவ்வாறு மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 105+ தொகுதிகளை வசப்படுத்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள திமுக கூட்டணிக்கு 74 தொகுதிகளும், மூன்றாம் இடத்தில் உள்ள அதிமுக கூட்டணிக்கு 53 தொகுதிகளும் மட்டுமே வசமாகின்றன. கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here