நடிகர் பிரம்​மானந்​தம் வைத்த நம்​பிக்​கை – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 31

0
23

திரைப்​படங்​களில் டப்​பிங் பேசும் போது எனக்கு ஏற்​பட்ட அனுபவங்​களை ஏற்​கெனவே சொல்​லி​யிருக்​கிறேன். ஆரம்​பத்​தில் எந்த வாய்ப்​பும் எளி​தாக எனக்கு கிடைத்​து​விட​வில்​லை. தங்​களை ‘ப்​ரமோட்’ பண்​ணிக்​கொள்​வதற்கு இப்​போது இருப்​பது போல, அலைபேசி​யோ, ட்விட்​டர், பேஸ்​புக், இன்​ஸ்​டாகி​ராம் போன்ற சமூக வலை​தளங்​களோ அப்​போது இல்​லை.

ஒவ்​வொரு தயாரிப்பு நிர்​வாகி​யாக போய் பார்க்க வேண்​டும், இயக்​குநர்​களைச் சந்​திக்க வேண்​டும், டப்​பிங் ரைட்​டர்​களைப் பார்க்க வேண்​டும், நேரடிப் படங்​கள் என்​றால் அசோசி​யேட், அசிஸ்​டென்ட் இயக்​குநர்​கள் என பலரைச் சந்​திக்க வேண்​டும், அப்​போது​தான், அவர்​களால்​தான் வாய்ப்பு கிடைக்​கும்.

அப்​படி அலைந்​தும் எனக்கு ஆரம்​பத்​தில் பெரிய வாய்ப்​பு​கள் கிடைக்​க​வில்​லை. என் தந்தை நிலச்​சு​வான்​தா​ர​ராக இருந்​தா​லும் நான் சுய​மாக உழைத்து முன்​னேற வேண்​டும் என்று நினைத்​தேன். அப்​பா​விடம் எது​வும் கேட்​கக்​கூ​டாது என்று வீம்​பு.

அதனால் புரொடக் ஷன் மானேஜர்​கள், டப்​பிங் ரைட்​டர்​கள், அசோசி​யேட்​டு​கள் ஆகியோரை பார்ப்​பது என்று அலைந்​தேன். என் அக்கா பெரிய டப்​பிங் ஆர்​டிஸ்ட் என்​ப​தால், சிலருக்கு மனம் இருந்​தா​லும் வாய்ப்பு கொடுக்க தயங்​கி​னார்​கள்.

சேது படத்தில்…

நான் எல்​லோரிட​மும் சாதா​ரண​மாகப் பழகு​வேன், நான் பழகும் முறை, எல்​லோரிட​மும் அன்​பாக இருப்​பது, இது எல்​லாம் பிடித்​து, பிறகு​தான் என்னை டப்​பிங் பேசுவதற்கு அழைத்​தார்​கள்.

அந்த மாதிரி​தான் அழைக்​கப்​பட்டு ‘கூடெ​விடே’ என்ற படம் மூலம் ஆரூர்​தாஸ் ஐயா யூனிட்​டில் இணைந்​தேன். அப்​போது, நடிகர் ரவி மோக​னின் தந்​தை​யார் எடிட்​டர் மோகன் அப்பா நிறைய டப்​பிங் படங்​கள் பண்​ணிக்​கொண்​டிருந்​தார்.

ஆரூர்​தாஸ் ஐயா டீம் மூல​மாக அறி​முக​மாகி, நான் அப்பா என்று கூப்​பிடும் அளவுக்கு நெருக்​க​மானேன். நடிகர் ரவி மோக​னும், ஜெயம் ராஜா​வும் என்னை அண்​ணன் என்​று​தான் அழைப்​பார்​கள்.

எடிட்​டர் மோகன் அப்பா பற்றி சொல்ல வேண்​டும் என்​றால், சரி​யான திட்​ட​மிடல் அவரிடம் உண்​டு. ‘டப்​பிங் இன்​னைக்கு ஆரம்​பிக்​குது; இன்​னைக்கு முடி​யுது; படம் இன்​னைக்கு ரிலீஸ்; இது​தான் டைட்​டில்’ என்று பிளான் பண்ணி பண்​ணக் கூடிய​வர்.

பிரம்​மானந்​தம்

டப்​பிங்​கில் என்ன சந்​தேகம் கேட்​டாலும் சொல்​லித்​தரு​வார். காலை​யில் டப்​பிங் தியேட்​டர் வந்து விட்​டார் என்​றால், காலை​யில் டிபன் சாப்​பிடும் நேரம், மதி​யம் சாப்​பாடு சாப்​பிடும் நேரம், சாயங்​காலம் டிபன் சாப்​பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்​களில் நின்​று​கொண்டே இருப்​பார். அவரின் பல படங்​களுக்கு நான் டப்​பிங் பேசி​யிருக்​கிறேன்​.ஒரு தகப்​பனுக்​கும் மகனுக்​கு​மான ‘பாண்​டிங்’ எங்​களுக்​குள் இருந்​தது. இப்​போதும் இருக்​கிறது.

ஒரு முறை, ஒரு மொழி​மாற்று படத்​துக்​கான டப்​பிங் நடந்து கொண்​டிருந்​தது. அப்​போது ஒரு வசனம், ஒரு பெயரைச் சொல்​லி, ‘அவர் பத்து தடவைக்கு மேல் போன் பண்​ணிட்​டார் சார்’ என்று ஒரு டயலாக்.

டப்​பிங் படம் என்​ப​தால் பேசுகிறவரின் உதட்​டசைவுக்கு ஏற்ப சரி​யான அளவில் வசனம் இருக்க வேண்​டும். ஆனால், இந்த வசனம் உதட்​டசைவை தாண்டி செல்​கிறது. பலமுறை அதை மாற்றி மாற்​றிப் பேசி​யும் ‘லிப் சிங்க்’ ஆகவில்​லை.

நான் உள்ளே இருந்து இதைக் கவனித்​துக் கொண்​டிருந்​தேன். பிறகு, “நான் பேசிப்​பார்க்​கவா இதை?” என்று கேட்​டேன். “பேசு, பார்ப்​போம்” என்​றார் அவர். “பத்து போன் பண்​ணிட்​டாரு” என்று நான் பேசி​யதும் சரி​யாக அந்த அளவுக்கு லிப் பொருந்​தி​யது. இதைப் பார்த்​து​விட்​டு, என்னை உள்ளே அழைத்​தார், எடிட்​டர் மோகன் அப்​பா.

எடிட்​டர் மோகன்

முதுகில் செல்​ல​மாக நான்கு சாத்தி சாத்​தி​விட்​டு, “இவ்​வளவு நேரம் பேசினோம், பார்த்​துட்​டுத்​தானே இருந்​தே; முதல்​லயே சொல்​லி​யிருக்க வேண்​டியது​தானே?” என்று செல்​ல​மாகக் கேட்​டார். நான் சிரித்​துக்​கொண்​டேன்.

இயக்​குநர் பாலா​வின் முதல் படம் விக்​ரம் நடித்த ‘சேது’. அந்​தப் படத்​தில் கதா​நாயகி​யின் தந்​தை​யாக நாயர் ராமன் நடித்​திருந்​தார். அவருக்கு டப்​பிங் பேசுவதற்​காக ‘வாய்ஸ் டெஸ்ட்’ எடுக்க வரச் சொல்​லி​யிருந்​தார்​கள்.

சாலிகி​ராமத்​தில் இருந்த சமீரா தியேட்​டரில் டப்​பிங் நடை​பெற்​றது. அங்கு இயக்​குநர் பாலா​வைச் சந்​தித்​தேன். நாயர் ராமன் சார், சிவகு​மார் அண்​ணா​விடம் பேசுவது போன்ற காட்​சி​யைத் திரை​யிட்​டார்​கள். நான் அந்த வசனத்​தைப் பிராமண பாஷை​யில் பேச வேண்​டும். உடனே பேசினேன்.

கேட்​டதும் ஓகே சொல்​லி​விட்​டார். அதை ரொம்ப சிலாகித்​தார். நாயர் ராமன் சாருக்கு சிறு​வய​திலிருந்தே என்னை தெரி​யும். அவர், “பாஸ்கர் சின்ன பைய​னாச்​சே, அவன் வாய்ஸ் எனக்கு எப்​படி செட் ஆகும்?” என்று கேட்​டிருக்​கிறார்.

“அவர் பேசி​யதை பாருங்க” என்று சொல்லி அவரை பார்க்க வைத்​தார்​கள். பார்த்​து​விட்​டு, “ரொம்ப நல்லா பேசிருக்​க​டா” என்று பாராட்​டி​னார். ஒரு முறை சகோ​தரர் மருத​பரணி எழு​திய டப்​பிங் படத்​துக்​காக நான் பேச சென்​றிருந்த போது, ஒரு தெலுங்கு தயாரிப்​பாளர் அங்கு வந்​திருந்​தார்.

அவர் சொன்​னார், “தெலுங்​குல இந்​தப் படத்​தோட படப்​பிடிப்​புக்​குப் போயிருந்​தேன். பிரம்​மானந்​தம் நடிச்​சிட்​டிருந்​தார். ஒரு டயலாக் அவர் சரி​யாகப் பேச​வில்​லை. ஆனால், டேக் நன்​றாக வந்​தது.

அப்​போது ஒரு அசோசி​யேட் “இந்த டயலாக் சரியா வரலை. இதை தமிழில் டப் பண்​றது கஷ்டம்” என்று சொன்​னதும், “அதை பாஸ்​கரு பார்த்​துக்கு வாரு’என்று தெலுங்​கில் சொன்​னதைக் கேட்​டேன் என்​றார். பிரம்​மானந்​தம் சார் என் மீது வைத்​திருந்த நம்​பிக்​கை​யைக் கேட்​டதும் எனக்​குச் சந்​தோஷ​மாக இருந்​தது.

இப்​படி, நான், சாய் குமார், சாய் ரவி, ரத்​தன் குமார் என அப்​போது எல்​லோருட​னும் டப்​பிங்​கில் இருந்த காலங்​கள் மிக மகிழ்ச்​சி​யாக இருந்​தது. இது​வரை எத்​தனை படங்​களுக்கு டப்​பிங் பேசினேன் என்று கணக்கு வைத்​துக்​கொள்​ள​வில்​லை. இப்​போதும்​ யாரும்​ அழைத்​தால்​ இறைவன்​ அருளால்​ டப்​பிங்​ பேசிக்​கொண்​டு​தான்​ இருக்​கிறேன்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here