மடிச்சல் பகுதியைச் சேர்ந்த சத்தியதாஸ் (57) என்ற விவசாயி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று சந்தவிளையில் உள்ள அவரது தென்னந்தோப்பில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் கண்டறிந்தனர். அவர் அருகே விஷ பாட்டில் கிடந்ததால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














