ஆந்திராவில் லேசான நில நடுக்கம்

0
14

ஆந்​திர மாநிலம், அனகாபல்லி மாவட்​டத்​தில் நேற்​று​முன்​தினம் நள்​ளிரவு 12.05 மணிக்கு திடீரென லேசான நில நடுக்​கம் ஏற்​பட்​டது. இதனால் மக்​கள் பீதி அடைந்​தனர்.

இந்த மாவட்​டத்​தில் ராம்​பில்​லி, எடமஞ்​சிலி, கோட்ட ஊரட்லா ஆகிய பகு​தி​களில் நில நடுக்​கத்தை மக்​கள் உணர்ந்​தனர். ரிக்​டர் அளவு 3.7 ஆக பதி​வாகி உள்​ளது. நில நடுக்​கத்தை உணர்ந்​ததும் பயந்து போய் மக்​கள் வீடு​களை விட்டு வெளியே ஓடி வந்​தனர்.

நிலநடுக்கம் மீண்டும் ஏற்படும் என்ற பயத்தில் இரவு முழு​வதும் மக்​கள் தூங்​காமல் பயத்​தில் சாலைகளி​லேயே கழித்​தனர். பின்​னர் அதி​காலை வேளை​யில் பயம் தெளிந்து அவர​வர் வீடு​களுக்​கு சென்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here