விஜய் பிரச்சார வாகனத்தின் முன் பைக் சாகசம்: அண்ணா பல்கலை. ஊழியருக்கு ரூ.3,000 அபராதம்

0
18

விஜய் பிரச்​சார வாக​னத்​தின் முன் பைக் சாகசத்​தில் ஈடு​பட்ட அண்ணா பல்​கலைக்​கழக ஊழியருக்கு போக்​கு​வரத்து போலீ​ஸார் அபராதம் விதித்​துள்​ளனர்.

தவெக தலை​வர் விஜய் சென்​னை​யில் ஆயிரம் விளக்​கு, தி.நகர் மற்​றும் எழும்​பூர் ஆகிய தொகு​தி​களில் கடந்த புதன்​கிழமை ரோடு ஷோ நடத்​தி​னார். அப்​போது ஆயிரக்​கணக்​கானோர் திரண்டு விஜய்யை வரவேற்​றனர்.

கோட்​டூர்​புரம் காந்தி மண்​டபம் சாலை அருகே விஜய்​யின் பிரச்​சார வாக​னம் சென்​ற​போது பைக்​கில் சென்ற நபர் ஒரு​வர் ஹெல்​மெட் அணி​யாமல் இரு கைகளை​யும் விட்​டு​ விட்டு பைக் சாகசத்​தில் ஈடு​பட்​டார்.

இது தொடர்​பான வீடியோ காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வைரலானது. இதுகுறித்து போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில் பைக் சாகசத்​தில் ஈடு​பட்​டது சென்னை அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் அலு​வலக உதவி​யாள​ராகப் பணி​யாற்றி வரும் மனோஜ்கு​மார் என்​பது தெரிய​வந்​து.

அவர் மீது ஹெல்​மெட் அணி​யாமல் சென்​றது, அதிவேக​மாக வாக​னத்தை இயக்​கியது, உடைந்த நம்​பர் பிளேட், ஆவணங்​கள் சரி​யாக வைக்​காதது உள்​ளிட்ட காரணங்​களுக்​காக ரூ.3,000 அபராதம் வி​தித்​தனர். மேலும் அவரது பைக்​கை​யும்​ பறி​முதல்​ செய்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here