தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழப்பு

0
19

தமிழகத்​தில் நடப்​பாண்​டில் நாய்க்​கடி​யால் 2 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ரேபிஸ் நோய் தொற்​றால் 13 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். தமிழகம் முழு​வதும் சுமார் 25 லட்​சம் தெரு​நாய்​கள் இருக்​கலாம் என்று உத்​தேச புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.

சென்னை போன்ற பெருநகரங்​களில் மட்​டுமே தெரு​நாய்​களுக்கு ஓரளவு தடுப்​பூசி போடப்​படு​கிறது. கிராமப்​புறங்​களில் நாய்​களுக்கு எவ்​விதத் தடுப்​பூசி​யும் போடாத​தால், நகரப் பகு​தி​களை​விட நாய்க்​கடி பாதிப்பு கிராமப்​புறங்​களில் அதி​கம் உள்​ளன.

கடந்த 2025-ம் ஆண்​டில் நாய்க்​கடி​யால் 6 லட்​சத்து 25,700 பேர் பாதிக்​கப்​பட்​ட​தில், 34 பேர் ரேபிஸ் நோய் தொற்று ஏற்​பட்டு உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது​வரை 2 லட்​சத்து 9 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் நாய்க்​கடி​யால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

13 பேர் ரேபிஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​துள்​ளனர். அதி​கபட்​ச​மாக சேலம் மாவட்​டத்​தில் 12,177, திருச்​சி​யில் 9,939, திரு​வள்​ளூரில், 9,265, திண்​டுக்​கல்​லில் 8,239, விழுப்​புரத்​தில் 8,213 பேர் நாய்க்​கடி​யால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதுதொடர்​பாக பொது சுகா​தா​ரத்​துறை அதி​காரி​கள் கூறும்​போது, “நாய், பூனை, குரங்கு கடித்த காயங்​களை முறை​யாக, கிரு​மி​நாசினி கொண்டு துாய்​மைப்​படுத்​தாமல் இருந்​தால் தொற்று ஏற்​படும். தடுப்​பூசிகளை உரிய நேரத்​தில் செலுத்​தாமல் இருந்​தால் ரேபிஸ் நோய் பரவுவதைத் தடுக்க முடி​யாது.

ஆழமான காயங்​களுக்கு தடுப்​பூசி​யுடன் சேர்த்​து, ஆர்​ஐஜி எனப்​படும் ரேபிஸ் இன்​யூனோகுளோபளின் தடுப்பு மருந்து செலுத்​தலாம்.

முதல் நாள், மூன்​றாவது நாள், ஏழாவது நாள் மற்​றும் 21-வது நாள் என 4 தவணை​களாக ரேபிஸ் தடுப்​பூசி செலுத்த வேண்​டும்.

இம்​யூனோ குளோபளின் மருந்​தானது முதல் நாளி​லேயே ரேபிஸ் தடுப்​பூசி​யுடன் செலுத்​தப்பட வேண்​டும். கால​தாம​தாகவோ அல்​லது அதை மட்​டும் தனி​யாகவோ செலுத்​தி​னால் பலன் இல்​லை. இதைக் கடைபிடித்​தால் ரேபிஸ்​ நோய்​ தொற்​றை தடுக்​கலாம்​” என்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here