180 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைதான மகாராஷ்டிர இளைஞரின் வீடு இடிப்பு

0
21

ம​கா​ராஷ்டி​ரா​வின் அமராவதி மாவட்​டம், பரத்​வாடா நகரை சேர்ந்​தவர் முகமது அயாஸ் என்​கிற தன்​வீர் (19). இவர் மீது, பாலியல் வன்​கொடுமை, பாலியல் துன்​புறுத்​தல் மற்​றும் ஆபாச வீடியோக்​களை பதிவு செய்​த​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக போலீ​ஸார் கூறுகை​யில், “வாட்​ஸ்-​அப், ஸ்னாப்​சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் 180 சிறுமிகளை முகமது அயாஸ் காதல் வலை​யில் வீழ்த்​தி​யுள்​ளார். பிறகு அவர்களை மும்பை மற்​றும் புனேவுக்கு அழைத்​துச் சென்​று, ஆபாச வீடியோக்​களை எடுத்​துள்​ளார். இது தொடர்​பாக இவரிடம் 350 வீடியோக்​கள் இருந்​தன. அந்த சிறுமிகளை பிளாக்​மெ​யில் செய்​ய​வும், அவர்​களை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தவும் அந்த வீடியோக்​களை இவர் பயன்படுத்தியுள்​ளார்” என்றனர்.

முகமது அயாஸ் தொடர்​புடைய சில புகைப்​படங்​கள் மற்​றும் வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலானதை தொடர்ந்து அவர் கடந்த செவ்​வாய்க் ​கிழமை கைது செய்​யப்​பட்​டார். அவரை 7 நாட்​கள் போலீஸ் காவலில் விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இந்த வழக்​கில் மேலும் 3 சந்​தேக நபர்​களை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். இந்​நிலை​யில் முகமது அயாஸ் வீட்​டில் இருந்த சட்​ட​விரோத கட்​டு​மானங்​கள் நேற்று ஜேசிபி மூலம் இடித்து அகற்​றப்​பட்​டன. இது தொடர்​பாக நகராட்சி ஏற்கெனவே நோட்​டீஸ் அனுப்​பி​யிருந்​த​தாக அதி​காரி​கள் தெரிவித்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here