அமெரிக்காவின் தடையை மீறி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த சீன கப்பல் – ஈரான் தூதரகம் கிண்டல்

0
23

அமெரிக்கா​வின் தடையை மீறி சீன எரி​வாயு கப்​பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்​றது. இது அமெரிக்கா​வுக்கு விடுக்​கப்​பட்ட சவாலாக கருதப்படுகிறது.

ஈரானை ஒட்டி அமைந்​துள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு முனை​களி​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​குவரத்தை அமெரிக்க கடற்​படை முடக்கி உள்​ளது. இந்த சூழலில் அமெரிக்​கா​வின் தடையை மீறி சீனா​வின் ரிச்ஸ்டாரி என்ற எரி​வாயு கப்​பல் நேற்று ஹார்​முஸ் ஜலசந்தியை கடந்​தது. இதில் 2.5 லட்​சம் பேரல் மெத்​த​னால் நிரப்​பப்​பட்டு இருந்​தது. ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துறைமுகத்​தில் இருந்து சீன கப்​பல் புறப்​பட்​ட​தாகக் கூறப்படு​கிறது.

இந்த சீன கப்​பல் ஈரானில் இருந்து தொடர்ச்​சி​யாக எரிவாயுவை நிரப்​பிச் சென்​றது. இதன்​காரண​மாக அண்​மை​யில் ரிச் ஸ்டாரி கப்​பலுக்கு அமெரிக்க அரசு தடை விதித்​தது. ஆனால் அமெரிக்​கா​வின் தடையை மீறி அந்த கப்​பல் மேற்கு ஆசி​யா​வில் தொடர்ந்து இயக்​கப்​பட்டு வருகிறது.

ரிச் ஸ்டாரி நேற்று ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்​த​போது, கப்​பலின் கேப்​டன் அமெரிக்க கடற்​படைக்கு முறைப்​படி தகவல் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்க அரசால் தடை விதிக்கப்​பட்ட கப்​பல் என்​ற​போ​தி​லும் அந்த கப்​பல் தடுத்து நிறுத்​தப்​பட​வில்​லை. அமெரிக்கா​வுக்கு சவால் விடுக்​கும் வகை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தியை சீன கப்​பல் கடந்து சென்​றிருப்​ப​தாக சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக கானா நாட்​டில் செயல்​படும் ஈரான் தூதரகம் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்​ப​தாவது: சீன கப்​பல் ஹார்​முஸ் ஜலசந்​தியை வெற்றிகர​மாக கடந்து சென்​றுள்​ளது. அமெரிக்​கா​வின் மிகப்​பெரிய போர்க்​கப்​பல்​கள், சீன கப்​பலுக்கு தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்​துள்​ளன. ஆனால் சீன கப்​பலின் கேப்டன் எதை​யும் கண்​டு​கொள்​ளாமல் ஹார்​முஸ் ஜலசந்தியை நிதான​மாக கடந்து சென்​றுள்​ளார்.

அமெரிக்கா​வுக்கு அஞ்​சும் நாடு​களுக்கு மட்​டுமே தடை விதிக்​கப்​பட்டு இருப்​ப​தாக​வும் அஞ்​சாத நாடு​களுக்கு தடை பொருந்​தாது என்​றும் சொல்​லப்​படு​கிறது. அமெரிக்கா​வுக்கு அஞ்​சாத நாடு​களின் பட்​டியல் மிக​வும் நீள​மாக இருக்​கிறது. இவ்​வாறு ஈரான்​ தூதரகம்​ கிண்டலடித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here