‘மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் கால் வைக்க மாட்டேன்’ – 1993ல் போட்ட சபதத்தை 2011ல் நிறைவேற்றிய மம்தா பானர்ஜி

0
21

மேற்கு வங்​க தலைமை செயலகத்​தில் கால் வைக்க மாட்​டேன் என்று 1993-ல் போட்ட சபதத்தை 2011-ல் முதல்வ​ராக நிறைவேற்​றி​னார் முதல்​வர் மம்தா பானர்​ஜி.

கடந்த 1993-ல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்​தார் மம்தா பானர்​ஜி. மக்​களவை எம்.பி.யான அவர் அப்​போதைய பிரதமர் நரசிம்​ம​ராவ் அமைச்​சர​வை​யிலும் இடம்​பெற்​றிருந்​தார். செல்​லும் இடங்களிலும் அவரது பேச்​சுக்கு வரவேற்பு இருந்​தது. கட்​சி​யின் ஃபயர் ​பி​ராண்ட் லீட​ராக அவர் செயல்​பட்டு வந்​தார்.

இந்​நிலை​யில் 1993ம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்​கத்​தின் நாடியா மாவட்​டத்​தைச் சேர்ந்த தீபாலி பசக் என்ற மாற்​றுத் ​திறனாளி (​வாய் பேச​ முடி​யாத, காது கேளாதவர்) பெண்​ணை, மார்க்​சிஸ்ட் கட்​சி​யைச் சேர்ந்த ஒரு​வர் வன்​கொடுமை செய்துவிட்​டார். இதனால் தீபாலி பசக் கர்ப்​ப​மா​னார். இது தொடர்பாக போலீ​ஸில் புகார் செய்​தும் பதிவு செய்யப்படவில்லை. அப்​போது ஜோதி​பாசு தலை​மையி​லான மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி ஆட்​சி​யில் இருந்​தது.

இந்த சம்​பவம் அறிந்​ததும் கொதித்​தெழுந்த மம்தா, முதல்​வர் ஜோதி​பாசு​விடம் இந்த விஷ​யத்தை எடுத்​துச் சொல்ல முயன்​றார். மே 6ம் தேதி பிற்​பகல் 3 மணிக்கு அவருக்கு முதல்​வரைச் சந்​திக்க அனு​மதி தரப்​பட்​டது. இதையடுத்து முதல்​வர் ஜோதி ​பாசு​வின் அறைக்கு 3 மணிக்கு மம்தா சென்​றார்.

அப்​போது முதல்​வர் ஜோதி​பாசு, வேறு யாருடனோ ஆலோசனையில் இருப்​ப​தாக​வும், அவரைச் சந்​திக்க முடி​யாது என்​றும் மம்​தா​விடம் ஜோதி​பாசு​வின் உதவி​யாளர்​களால் தெரிவிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து சிறிது நேரத்​தில் மம்தாவைச் சந்​திக்​காமலேயே அங்​கிருந்து ஜோதி​பாசு புறப்பட்டுச் சென்​று​விட்​டார். இது மம்​தாவுக்கு மிகப்​பெரிய அவமானத்தை ஏற்​படுத்​தி​யது. ஏழை பெண்​ணுக்கு நீதி கேட்க வந்த​போது முதல்​வர் இப்​படிச் செய்​தது அவருக்​குள் இருந்த உணர்​வைத் தூண்​டி​விட்​டது.

இதுகுறித்து அப்​போதைய போலீஸ் துணை கமிஷனரும், தற்போதைய திரிண​மூல் காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான அபானி மோகன் ஜோர்​டர் கூறியதாவது: முதல்​வர் ஜோதி​பாசு புறப்​பட்​டுச் சென்​றதும், முதல்​வர் அலு​வல​கம் இருக்​கும் ரைட்டர்ஸ் பில்​டிங்​கில் மம்தா கோப​மாக அமர்ந்​திருந்​தார். அதேநேரத்​தில் இந்த சம்​பவத்தை இப்​படியே விட்​டு​விடக்​கூ​டாது என்று அவர் முடிவு செய்​தார்.

இதையடுத்து முதல்​வர் ஜோதி​பாசு அலு​வல​கம் இருக்​கும் பகுதியிலேயே அமர்ந்து தர்​ணா​வில் ஈடு​பட்​டார். தொடர்ந்து 3 மணி நேரம் அங்​கேயே இருந்​தார். முதல்​வரைச் சந்​திக்​காமல் இங்கிருந்து செல்​ல​மாட்​டேன் என்​றார். இதையடுத்து பெண் போலீஸார் விரைந்து வந்து அவரை குண்​டுக்​கட்​டாகத் தூக்​கிச் சென்று போலீஸ் வேனில் ஏற்​றினர். மம்​தாவுடன் இருந்த கர்ப்பிணிப் பெண் தீபாலி, போலீ​ஸார் நடத்​திய தடியடி​யில் காயமடைந்​தார். இதைத் தொடர்ந்து அவர் மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டார்.

பின்​னர் மம்தா பானர்​ஜி, லால் பஜாரிலுள்ள போலீஸ் கட்டிடத்துக்குக் கொண்டு செல்​லப்​பட்டு சிறை வைக்​கப்​பட்​டார். அவர் மத்​திய அமைச்​ச​ராக இருந்​த​போ​தி​லும் அவரை போலீ​ஸார் சிறை​யில் தள்​ளினர். முதலில் சிறையி​லிருந்து வர மறுத்த மம்​தா, நான் பேசி​யதற்​குப் பின்​னர் வெளியே வரச் சம்​ம​தித்​தார்.

வெளியே வந்​த​போது இளைஞர் காங்​கிரஸார், போலீ​ஸாரைத் தாக்க முற்​பட்​டனர். ஆனால் மம்தா அவர்​களைத் தடுத்​து​விட்​டார். பின்​னர் தன்னை போலீஸ் வேனிலேயே வீட்​டில் விட்டுவிடுவதற்கும் ஒப்​புக் கொண்​டார். செல்​லும் வழி​யில் மாயோ சாலை கிராசிங்​கில் உள்ள காந்தி சிலை அருகே சிறிது நேரம் அமர்ந்​திருந்​தார்.

இந்த சம்​பவத்​தால்​தான், தலை​மைச் செயல​கத்​தில் நான் கால் வைக்க மாட்​டேன் என்று மம்தா சபதம் பூண்​டார். அந்த சபதத்தை சுமார் 18 ஆண்​டு​கள் வரை அவர் காப்​பாற்​றி​னார். 2011ம் ஆண்டு மே 20ல் முதல்​வ​ராக பதவி​யேற்ற பின்​னர்​ தான் அவர் தலை​மைச் செயல​கம் நுழைந்​தார். மேலும், மேற்கு வங்க மாநிலத்​தின் முதல் பெண்​ முதல்​வர்​ என்​ற பெரு​மை​யை​யும்​ பெற்​றார்​. இவ்​வாறு அபானி மோகன்​ தெரிவித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here