போர் செய்திகளை வைத்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிய வர்த்தகர்கள்

0
20

ஈ​ரான் மீதான போர் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி தொடங்​கிய​திலிருந்​து, சர்​வ​தேச நிதிச் சந்​தைகளில் முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் சில மர்​ம​மான வர்த்​தகங்​கள் அரங்​கேறி வரு​வ​தாக கூறப்​படு​கிறது.

குறிப்​பாக, அமெரிக்க அரசின் முக்​கிய​மான கொள்கை முடிவு​கள் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படு​வதற்கு சில நிமிடங்​களுக்கு முன்​ன​தாகவே, சந்​தை​யில் பெரும் முதலீடு​கள் செய்​யப்​படும் போக்கு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

வெனிசுலா மீதான தாக்​குதல், ஈரான் மீதான தாக்​குதல், அமெரிக்​க-ஈ​ரான் போர் நிறுத்த அறி​விப்பு உள்​ளிட்ட நிகழ்​வு​களுக்கு சில மணி நேரங்​களுக்கு முன்​பாகவே இன்​சைடர் டிரேடிங் நடை​பெற்​ற​தாக​வும், அதன் மூலம் சில வர்த்​தகர்​கள் கோடிக்​கணக்​கில் லாபம் ஈட்​டி​யுள்​ள​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது. அதிபரின் வெள்ளை மாளி​கை​யில் ரகசி​யத் தகவல்​களை முன்​கூட்​டியே அறிந்து இந்த ‘உள்​நோக்க வர்த்​தகம்’ நடை​பெற்​றிருக்​கலாம் என்ற பலத்த சந்​தேகம் வர்த்தக உலகில் பலரிடம் எழுந்​துள்​ளது.

கடந்த மார்ச் மாதம் வரை இத்​தகைய முறை​கேடு​களை மறுத்து வந்த வெள்ளை மாளிகை, ஏப்​ரல் மாதத்​தில் தனது நிலைப்​பாட்டை மாற்​றிக் கொண்​டது. ரகசி​யக் கொள்கை முடிவு​கள் தொடர்​பான அரசு ஊழியர்​கள் சந்​தைகளில் வர்த்​தகம் செய்​யக் கூடாது என சுற்​றறிக்கை அனுப்​பப்​பட்​டுள்​ளது.

முறையற்ற வகை​யில் லாபம் ஈட்​டு​வது தடை செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இந்த நிலை​யில், ரகசி​யத் தகவல்​கள் கசிந்​தது குறித்து விரி​வான விசா​ரணை நடத்த வேண்​டும் என்று அமெரிக்க நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் மத்​தி​யிலும் கோரிக்கை வலுத்​துள்​ளது.

முக்​கிய முடிவு​கள் வெளி​யா​வதற்கு முன்பே வர்த்​தகம் நடை​பெறு​வது சந்​தை​யின் நேர்​மையை கேள்விக்​குறி​யாக்கி உள்​ளது. சிலருக்கு மட்​டும் ரகசி​யத் தகவல்​கள் கசி​ய​விடப்​பட்​டுள்​ளதா என்ற கேள்​வி​யும் எழுந்​துள்​ளது. இது குறித்து அமெரிக்​கப் பங்​குச் சந்தை கட்​டுப்​பாட்டு வாரி​யங்​களான எஸ்​இசி மற்​றும் சிஎப்​டிசி ஆகியவை முறை​யான விசா​ரணை நடத்த வேண்​டும் என்​றும், இதனால் கோடிக்​கணக்​கில் பலன் அடைந்​தோர் யார் என்​பதை கண்​டறிய வேண்​டும்​ என்​ற கோரிக்​கைகளும்​ எழுந்​துள்​ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here