கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

0
24

 கல்​பாக்​கத்​தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்​டத்​தைக் கைவிட வேண்​டும் என, மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: கல்​பாக்​கத்​தில் உள்ள 500 மெகா​வாட் மின்​னுற்​பத்​தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை, ஏப்​-6ம் தேதி முதலா​வது அணுப்​பிளவு செயல்​பாட்டு நிலையை எட்​டிய​தாக பிரதமர் மோடி சமூக ஊடகங்​களின் வாயி​லாக வெளி​யிட்​டார்.

மத்​திய அணுசக்​தித் துறை, கல்​பாக்​கம் அணுவுலை வளாகத்​தில் 500 மெகா​வாட் உற்​பத்​தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையை 20 ஆண்​டு​களுக்கு முன்​னர் கட்​டத் தொடங்​கியது. 2004-ம் ஆண்டு கட்​டு​மானப் பணி​கள் தொடங்​கப்​பட்​டு, இத்​திட்​டம் 2010-ம் ஆண்டு பயன்​பாட்​டுக்​குக் கொண்டு வர திட்​ட​மிடப்​பட்​டிருந்​தது.

ஈனுலை தொழில்​நுட்​பம் பாது​காப்​பற்​றது, தேவையற்​றது, அதிக பொருளா​தா​ரச் சுமையை ஏற்​படுத்​து​வது உள்​ளிட்ட காரணங்​களால் அமெரிக்​கா, ஜப்​பான் மற்​றும் ஐரோப்​பிய நாடு​கள் அதை கைவிட்​டன.

இவ்​வகை உலைகளில் குளிர்​விப்​பா​னாக பயன்​படுத்​தப்​படும் திரவ சோடி​யம் கசிந்த காரணத்​தால் ஜப்​பானில் மாஞ்சூ ஈனுலை​யில் தீ விபத்து ஏற்​பட்டு அவ்​வுலை மூடப்​பட்​டது.

பிரான்​சில் செயல்​பட்டு வந்த சூப்​பர் பீனிக் ஈனுலை​யும் அதிக பொருளா​தா​ராச் சுமை, சுற்​றுச்​சூழல் பாது​காப்​பின்​மை, பொது​மக்​கள் போராட்​டம் உள்​ளிட்ட காரணங்​களால் மூடப்​பட்​டது.

இவ்​வுலைகளில் இருந்து வெளி​யாகும் கழி​வு​கள் அணு ஆயுதங்​கள் தயாரிக்​கப் பயன்​படுத்​தப்​படலாம் என்​கிற சந்​தேகத்​தை​யும், பல அணுசக்​தித் துறை நிபுணர்​கள் எழுப்​பி​யுள்​ளனர்.

ஏற்​க​னவே, கூடங்​குளத்​தில் 6 அணுவுலைகளும், அணுக்​கழிவு மையங்​களும் மத்​திய அரசு அமைத்​திருக்​கிறது. இப்​போது, ஆபத்​து​மிக்க ஈனுலைகளைச் செயல்​படுத்தி தமிழக மக்​களை கதிரியக்க ஆபா​யத்​தில் தள்​ளுகிறது மோடி அரசு.

தமிழக மக்​களை சோதனை எலிகளாக்கி ஈனுலையை செயல்​படுத்த முயலும் பாஜக அரசை வன்​மை​யாகக் கண்​டிப்​ப​தோடு, இத்​திட்​டத்தை உடனடி​யாக கைவிட வேண்​டும்​. இவ்​வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here