32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சத்யஜோதி ஃப்லிம்ஸ் – இளையராஜா கூட்டணி

0
61

சத்யஜோதி நிறுவனத்தின் படத்துக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு இசையமைக்கவுள்ளார் இளையராஜா.

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லெனின் பாண்டியன்’. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தாலும், யார் இசையமைப்பாளர் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

சத்யஜோதி நிறுவனம் – இளையராஜா கூட்டணி பல மறக்க முடியாத படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. ‘மூன்றாம் பிறை’, ‘தங்க மகன்’, ‘காக்கி சட்டை’, ‘பகல் நிலவு’, ‘காதல் பரிசு’, ‘கிழக்கு வாசல்’, ‘பணக்காரன்’, ‘இதயம்’, ‘ஆனஸ்ட் ராஜ்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. தற்போது ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மூலமாக சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளது.

பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீடு எப்போது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here