வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே சிக்னல் பிரச்சினையால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

0
23

வியாசர்பாடி ஜீவா நிலை​யம் அருகே ஏற்​பட்ட சிக்​னல் பிரச்​னை​யால், 35 நிமிடங்​கள் வரை மின்​சார ரயில் சேவை பாதிக்​கப்​பட்​டது. இதனால், பயணி​கள் கடும் அவதிக்கு உள்​ளாகினர்.

சென்னை புறநகர் மின்​சார ரயில் சேவை​யில், சென்ட்​ரல் – அரக்​கோணம் வழித்​தடம் முக்​கிய​மான​தாகும். இத்​தடத்​தில், நாள்​தோறும் 200-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில் சேவை​கள் இயக்​கப்​படு​கின்​றன. இதில் லட்​சக்​கணக்​கான மக்​கள் பயணிக்​கின்​றனர்.

இந்​நிலை​யில், வியாசர்​பாடி ஜீவா ரயில் நிலை​யம் அருகே நேற்று பிற்​பகலில் திடீரென சிக்​னல் பிரச்​சினை ஏற்​பட்​டது. இதையடுத்​து, ஆவடி​யில் இருந்து சென்னை கடற்​கரை நோக்கி சென்ற மின்​சார ரயிலும், இதன் பின்​னால் சென்ட்​ரல் நோக்கி வந்து கொண்​டிருந்த மின்​சார ரயிலும் வியாசர்​பாடி ஜீவா ரயில் நிலை​யத்​தில் நிறுத்​தப்​பட்​டது.

இதற்​கிடை​யில், சிக்​னல் பிரச்​சினை தொடர்​பாக, ரயில்வே அதி​காரி​களுக்கு தகவல் கொடுக்​கப்​பட்​டது. தகவலின் பேரில், அவர்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்​து, தொழில்​நுட்​பக்​கோளாறை சரிசெய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

சுமார் 30 நிமிடங்​கள் போராடி சிக்​னலில் ஏற்​பட்ட தொழில்​நுட்​பக்​கோளாறை சரி செய்​தனர். இதையடுத்​து, மின்​சார ரயில்​கள் மீண்​டும் சீராக இயங்​கத் தொடங்​கியது. இப்​பிரச்​சினை​யால், மின்​சார ரயில் சேவை அரைமணி நேரத்​துக்கு மேலாக பாதிக்​கப்​பட்​டது.

ஏற்​க​னவே, இவ்​வழித் தடத்​தில் பராமரிப்பு காரண​மாக 65 ரயில் சேவை​கள் ஓராண்​டுக்கு முன்பு நிறுத்​தப்​பட்​டது. இதனால், 20 நிமிட இடைவெளி​யில் ரயில்​கள் இயக்​கப்​படு​வ​தால் பயணி​கள் தின​மும் அவதிப்​பட்டு வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, இது​போன்று அவ்​வப்​போது ஏற்​படும் சிக்​னல் பிரச்​சினை காரண​மாக ரயில் பயணி​கள் மேலும் அவதிக்​குள்​ளாகின்றனர்.

இது குறித்​து, ரயில்வே அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “வண்​ணாரப்​பேட்டை – வியாசர்​பாடி ஜீவா நிலை​யம் இடையே ஏற்​பட்ட சிக்​னல் பிரச்​சினை காரண​மாக, மின்​சார ரயில்​கள் ஆங்​காங்கே நிறுத்​தப்​பட்​டன. சிக்​னலில் ஏற்​பட்ட தொழில்​நுட்​பக் கோளாறு சரி செய்த பிறகு, மின்​சா​ர ரயில்​ சேவை மீண்​டும்​ சீரானது” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here