‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணிச் சான்று: கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு

0
25

‘டெட்’ தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் ஆசிரியர்​களுக்கு தாமதமின்றி பணிச் சான்று வழங்​கு​மாறு மாவட்​டக் கல்வி அதி​காரி​களுக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் அவசர உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ், மின்​னஞ்​சலில் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்:

தமிழகத்​தில் உள்ள அரசுப் பள்​ளி​கள், அரசு உதவி பெறும் பள்​ளி​களில் சுயநி​திப் பிரிவு மற்​றும் அங்​கீகரிக்​கப்​பட்ட தனி​யார் பள்​ளி​களில் கடந்த 2015 செப்​.1-ம் தேதி அல்​லது அதற்கு முன்​னர் இடைநிலை, பட்​ட​தாரி ஆசிரியர் மற்​றும் அதற்கு இணை​யான பதவி​களில் கால​முறை ஊதி​யம், தொகுப்​பூ​தி​யம், பகு​திநேர ஊதி​யம் அடிப்​படை​யில் பணி​யாற்​றும் ஆசிரியர்​களுக்கு ‘டெட்’ தகு​தித் தேர்வு நடத்​தப்பட உள்​ளது. இதற்கு விண்​ணப்​பிக்க ஏப்​.10-ம் தேதி கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரி​யம் அறி​வித்​துள்​ளது.

மேற்​கண்ட ஆசிரியர்​கள் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க, பணிச் சான்றை பதிவேற்​றம் செய்​வது அவசி​யம். எனவே, அவர்​களுக்​கான பணிச் சான்றை

ஏப்​.10-ம் தேதிக்கு முன்பு வழங்க அனைத்து மாவட்ட, வட்​டாரக் கல்வி அதி​காரி​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இதில் தாமதம் ஏற்​பட்டு ஆசிரியர்​கள் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க இயலாத சூழ்​நிலை ஏற்​பட்​டால், சம்​பந்​தப்​பட்ட மாவட்ட, வட்​டாரக் கல்வி அதி​காரி​கள்​தான் பொறுப்​பேற்க நேரிடும். எனவே, இதில் தனி கவனம் செலுத்​தி, காலம் தாழ்த்​தாமல் ஆசிரியர்​களுக்கு பணிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here