குவைத் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய தொழிலாளி உயிரிழப்பு

0
75

குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனை குவைத்தின் மின்சார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில் தங்கள் நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள தப்ரிஸ் பெட்ரோகெமிக்கல் அமைப்பின் மீது எதிர்தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது இந்த மோதலின் தொடக்கமாக அமைந்தது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இப்போது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளின் குடியிருப்பு மீது நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. தாக்குதல் விரிவு செய்யும் நோக்கில் இந்த முடிவு என ஈரான் இதை சொல்லியுள்ளது. அதே நேரத்தில் தரைவழி தாக்குதலுக்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்தியர் உயிரிழப்பு: இந்த சூழலில் குவைத் நாட்டில் உள்ள மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. இதை திங்கட்கிழமை (மார்ச் 30) அன்று குவைத் அரசு உறுதி செய்தது. “குவைத் அரசுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டுள்ள தாக்குதலின் ஒரு பகுதியாக, மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலைய சேவை கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த கட்டிடம் பெரிய அளவில் சேதமடைந்தது” என்று குவைத் மின்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here