அம்பத்தூர் அருகே உரிய ஆவணங்களின்றி வீட்டிலிருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

0
23

அம்​பத்​தூர் அருகே அண்ணா நகர் மேற்கு விரிவு, கோல்​டன் குடி​யிருப்பு பகு​தி​யில் உரிய ஆவணங்​களின்றி வீட்​டில் வைக்​கப்​பட்​டிருந்த ரூ.1.22 கோடியை நேற்று முன் தினம் இரவு தேர்​தல் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​தனர்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, வாக்​காளர்​களுக்கு பணம் மற்​றும் பரிசு பொருட்​களை அரசி​யல் கட்​சி​யினர் விநி​யோகிப்​பதை தடுக்​கும் வகை​யில், திரு​வள்​ளூர் மாவட்ட தேர்​தல் அலு​வலரின் கீழ் உள்ள கும்​மிடிப்​பூண்​டி, மாதவரம், திருத்​தணி உள்​ளிட்ட 10 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் தேர்​தல் பறக்​கும் படை​யினர், நிலை கண்​காணிப்பு குழு​வினர் தீவிர கண்​காணிப்பு பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

அந்த வகை​யில், அம்​பத்​தூர் சட்​டப்​பேரவை தொகு​திக்​குட்​பட்ட அம்​பத்​தூர் அருகே அண்ணா நகர் மேற்கு விரிவு, கோல்​டன் குடி​யிருப்பு பகு​தி​யில் நேற்று முன் தினம் இரவு தேர்​தல் தேர்​தல் பறக்​கும் படை​யினர் தீவிர வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, அவ்​வழியே இரு சக்கர வாக​னத்​தில் வந்த இளைஞர் ஒரு​வர் நிற்​காமல் வேக​மாக சென்​று, அப்​பகு​தி​யில் உள்ள வீட்​டின் முன் இரு சக்கர வாக​னத்தை நிறுத்​தி​விட்​டு, கைப்​பை​யுடன் வீட்​டினுள் நுழைந்​தார்.

இதையடுத்​து, அந்த இளைஞரை பின் தொடர்ந்து சென்ற தேர்​தல் பறக்​கும் படை​யினர் வீட்​டினுள் புகுந்​து, சோதனை நடத்​தினர். அச்​சோதனை​யில், கைப்பை மற்​றும் வீட்​டினுள் ரூ.1.22 கோடி இருந்​தது.

இதுகுறித்து, தேர்​தல் பறக்​கும் படை​யினர் தீவிர விசா​ரணை நடத்​தினர். அவ்​வி​சா​ரணை​யில் தெரிய வந்​த​தாவது: அண்ணா நகர் மேற்கு விரிவு, கோல்​டன் குடி​யிருப்பு பகு​தி​யில் வசிக்​கும் மஞ்​சு​நாத் என்ற இளைஞர், டாஸ்​மாக் மது​பான கடைகளின் விற்​பனை பணத்தை வசூலித்​து, வங்​கி​யில் செலுத்​தும் நிறுவன ஊழியர்.

அவர் முகப்​பேர் பகு​தி​யில் உள்ள டாஸ்​மாக் மது​பான கடைகளில் விற்​பனை தொகையை வசூலித்த தொகையோடு, தான் வசிக்​கும் பகு​திக்கு சென்று கொண்​டிருந்​துள்​ளார். அப்​போது, அச்​சத்​தின் காரண​மாக தேர்​தல் பறக்​கும் படை​யினர் சோதனைக்கு ஒத்​துழைக்​காமல் இரு சக்கர வாக​னத்​தில் வேக​மாக சென்​றுள்​ளார்.

அவர் கைப்பை மற்​றும் வீட்​டினுள் வைத்​திருந்த ரூ.1.22 கோடி டாஸ்​மாக் மது​பான கடைகளின் விற்​பனை தொகை​யாகும். இவ்​வாறு அந்த விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இருப்​பினும், ரூ.1.22 கோடிக்கு உரிய ஆவணங்​கள் இல்​லாத​தால், அதனை தேர்​தல் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​து, அம்​பத்​தூர் சட்​டப்​பேரவை தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலரும், பெருநகர சென்னை மாநக​ராட்​சி​யின் அம்​பத்​தூர் மண்டல உதவி ஆணை​யரு​மான ஆர்​.ஏ.பிர​பாகரிடம்​ ஒப்​படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here