தமிழகத்தைச் சேர்ந்த 10 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து

0
25

தமிழகத்​தைச் சேர்ந்த 10 போலீஸ் அதி​காரி​கள் ஐபிஎஸ் அந்​தஸ்து வழங்​கப்​பட்​டுள்​ளது. தமிழக காவல் துறை​யில் 3 கட்​டங்​களாக பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட்டு வரு​கின்​றன.

முதல் கட்​ட​மாக 2-ம் நிலை காவலர்​கள் தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூல​மும், உதவி ஆணை​யர்​கள் (டிஎஸ்​பி) தமிழக அரசால் நடத்​தப்​படும் குரூப்-1 தேர்வு மூல​மும், அடுத்த கட்​ட​மாக மத்​திய அரசு (யுபிஎஸ்சி தேர்​வு) மூல​மும் ஐபிஎஸ் அதி​காரி​களும் தேர்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றனர்.

இவர்​களில் குரூப்-1 தேர்வு மூலம் தேர்வு செய்​யப்​பட்டு பணி​யமர்த்​தப்​படும் போலீ​ஸாருக்கு பணிக் காலத்​தின் அடிப்​படை​யில் ஐபிஎஸ் அந்​தஸ்து வழங்​கப்​படும்.

அந்த வகை​யில், துணை ஆணை​யர் மற்​றும் எஸ்பி அந்​தஸ்​தில் தற்​போது தமிழகத்​தில் பல்​வேறு மாவட்​டங்​களில் பணி​யாற்றி வரும் எஸ்​.அர​விந்த், என்​.ஸ்​டீபன் ஜேசு​பாதம், பி.தங்​கதுரை, எஸ்​.எஸ்​.மகேஷ்வரன், வி.ஆர்​.ஸ்ரீநி​வாசன், டாக்​டர் கே.பிர​பாகர், சி.சி​யாமளா தேவி, எம்​.கிங்​ஸ்​லின், வி.சி​யாமளா தேவி, டாக்​டர் எல்​.​பாலாஜி சரவணன் ஆகிய 10 போலீஸ் அதி​காரி​களுக்கு ஐபிஎஸ் அந்​தஸ்து வழங்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கான உத்​தரவை மத்​திய உள்​துறை அமைச்​சகம் பிறப்​பித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here