குஜராத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்

0
28

பொது சிவில் சட்டத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட் கடந்த 2024ம் ஆண்டு அமல்படுத்தியது.

இந்நிலையில், ‘குஜராத் பொது சிவில் சட்டம் 2026’ மசோதாவை முதல்வர் புபேந்திர படேல், சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இது குறித்து அவையில் தொடர்ந்து 7 மணி நேரத்துக்கு மேல் விவாதம் நடைபெற்றது. அதன்பின் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மத பாகுபாடின்றி திருமணம், விவாகரத்து, திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்தல் போன்றவற்றில் அனைவருக்கும் பொதுவான சட்டவிதிமுறைகளை கொண்டுள்ளது. திருமணம் செய்யாமல் வாழ்வோருக்கும், பொது சிவில் சட்ட மசோதாவில் பதிவு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இவர்கள் முறையான அறிவிப்பு மூலம் தங்கள் உறவை முறித்துக் கொள்ளலாம்.

இந்த சட்டம் மூலம் வாழ்க்கைத் துணைவர் உயிரோடு இருக்கும்போது, 2-வது திருமணம் செய்ய முடியாது. திருமணம் செய்யும் இருவருக்கும், வாழக்கைத்துணை உயிரோடு இல்லாமல் இருந்தால் மட்டுமே, அந்த திருமணம் செல்லுபடியாகும். இந்த சட்டம் வேறு பகுதிகளில் வசிக்கும் குஜராத் மக்களுக்கும் பொருந்தும். ஆனால் பழங்குடியினருக்கு இந்த பொது சிவில் சட்டம் பொருந்தாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here