ஈரான் போர் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் ஆலோசனை

0
33

ஈ​ரான் போர் தொடர்​பாக பிரதமர் மோடி​யுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசி​யில் முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்​படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதன் எதிர்​வினை​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் ராணுவம் முழு​மை​யாக மூடி​யிருக்​கிறது. அந்த நாட்டு ராணுவத்​தின் சிறப்பு அனு​ம​தி​யுடன் சில சரக்கு கப்​பல்​கள் மட்​டும் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்ல அனு​மதி வழங்​கப்​படு​கிறது.

இதனால் வளை​குடா நாடு​களின் கச்சா எண்​ணெய், எரி​வாயு போக்​கு​வரத்து முடங்கி உலகம் முழு​வதும் பெட்​ரோல், டீசல், எல்​பிஜி, எல்​என்ஜி காஸுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு உள்​ளது.

இந்​தச் சூழலில் பிரதமர் மோடி​யுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசி​யில் முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். இதுகுறித்து இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பிரதமர் மோடி​யுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசி​யில் பேசி​னார். மேற்கு ஆசிய நில​வரம் குறித்து இரு​வரும் ஆலோ​சித்​தனர். ஹார்​முஸ் ஜலசந்​தியை திறப்​பது குறித்​தும் இரு​வரும் ஆலோ​சனை நடத்​தினர்” என்று தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அதிபர் ட்ரம்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்கு ஆசியா நிலவரம் குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். மேற்கு ஆசியாவில் பதற்றத்தைத் தணித்து உடனடியாக அமைதியை ஏற்படுத்த இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. ஒட்டுமொத்த உலகத்துக்காகவும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும். அமைதி முயற்சி தொடர்பாக இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here