ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் சமரச முயற்சி? – இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை

0
27

மத்​திய கிழக்​கில் போரில் ஈடு​பட்டு வரும் அமெரிக்​கா-இஸ்​ரேல், ஈரான் இடையே சமரச முயற்சியை ஏற்​படுத்​த பாகிஸ்தான் முயன்று வரு​வ​தாக ‘பை​னான்​சி​யல் டைம்​ஸ்’ செய்தி வெளி​யிட்​டுள்​ளது.

பாகிஸ்​தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருக்​கும் ஈரானுக்​கும் இடை​யில் உள்ள நெருக்​க​மும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​புடன் அவர் கொண்​டுள்ள சுமுக​மான உறவும் இந்​தப் பேச்​சு​ வார்த்தை முயற்​சிக்கு அடிப்படையாக அமைந்​துள்​ள​தாக அந்த செய்​தி​யில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.

ஈரான் மீதான தாக்​குதல்​களைக் கண்​டிக்​கும் அதே வேளை​யில், பதற்​றத்தை தணிக்க ராஜதந்​திர ரீதி​யில் பேச்​சு​வார்​த்தை​யில் ஈடுபட வேண்​டும் என ஈரானிடம் பாகிஸ்​தான் கோரி வந்​தது.

இந்​நிலை​யில், ட்ரம்ப் நிர்​வாகத்​தின் உயர் அதிகாரிகளுக்கும் ஈரானுக்​கும் இடையி​லான பேச்​சு​வார்த்​தையை இந்த வாரத்​திலேயே இஸ்​லா​மா​பாத்​தில் நடத்த பாகிஸ்​தான் முன்​வந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. இதற்​காக, பாகிஸ்​தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஞாயிற்​றுக்​கிழமை அதிபர் ட்ரம்ப்​புடன் பேசி​ய​தாக​வும். மறு​புறம், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் திங்​களன்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யானுடன் ஆலோ​சனை நடத்தியதாக​வும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here