பேரவைத் தேர்தலை புறக்கணிக்காமல் வாக்களிக்க முடிவு: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு அறிவிப்பு

0
19

பரந்​தூர் பசுமை வெளி விமான நிலை​யத் திட்​டத்தை எதிர்த்​துப் போராடி வரும் கிராம மக்​கள், நடை​பெற உள்ள தமிழ்​நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலைப் புறக்​கணிக்​காமல், தங்​களுக்கு ஆதர​வளிக்​கும் கட்​சிகளுக்கு வாக்​களிக்​கப் போவ​தாக தெரி​வித்​துள்​ளனர்.

காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூரில் அமைய​வுள்ள புதிய விமான நிலை​யத் திட்​டத்​தைக் கைவிடக் கோரி, மக்​கள் நீண்ட கால​மாகத் தொடர் போராட்​டங்​களை முன்​னெடுத்து வரு​கின்​றனர். இதன் ஒரு பகு​தி​யாக, கடந்த 2024-ம் ஆண்டு நடை​பெற்ற நாடாளு​மன்​றத் தேர்​தலின்​போது, போராட்​டக் குழு​வினரின் ஒரு​மித்த முடி​வின்​படி தேர்​தலை புறக்​கணித்​தனர்.

இந்​நிலை​யில், ஏப்​ரல் மாதம் நடை​பெற உள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தல் குறித்​துப் போராட்​டக் குழு​வின் முக்​கிய ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தின் முடிவு​கள் குறித்​துப் போராட்​டக் குழு​வின் தலை​வர் க.சுப்​பிரமணி​யன், செய​லா​ளர் எஸ்​.டி.க​திரேசன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கடந்த மக்​கள​வைத் தேர்​தலைப் புறக்​கணித்​தது போலவே இந்​தத் தேர்​தலை​யும் புறக்​கணிக்க முதலில் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

ஆனால், எங்​கள் போராட்​டக் களத்​துக்கு நேரில் வந்​து, சட்​டப் போராட்​டங்​களுக்​குப் பல்​வேறு வகை​களில் உதவி செய்​து வரும் சில அரசி​யல் கட்​சிகள், தேர்​தலைப் புறக்​கணிக்க வேண்​டாம் எனக் கேட்​டுக் கொண்​டுள்​ளன.

போராட்​டக் குழு முன்​னெடுக்​கும் முயற்​சிகளுக்​குத் துணை​யாக நிற்​கும் தங்​களுக்கு ஆதரவு அளிக்க வேண்​டும் என அவர்​கள் தரப்​பில் கோரிக்கை வைக்​கப்​பட்​டது.

இதனை ஏற்​று, இந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலைப் புறக்​கணிப்​ப​தில்லை எனத் தீர்​மானிக்​கப்​பட்​டுள்​ளது. போராட்​டக் களத்​துக்கு நேரில் வந்து உறு​துணை​யாக இருக்​கும் கட்​சிகளுக்கு முழு​மை​யான ஆதரவை அளித்து வாக்​களிப்​பது எனவும் முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி, மக்​கள் தேர்​தலில் பங்​கேற்று தங்​களது வாக்​கு​களைப் பதிவு செய்​வார்​கள்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here