‘புஷ்பா 2’-வை அடுத்து அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படத்தை அட்லி இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக் ஷன் படமான இதில், தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்குர் ஆகியோரும் நாயகிகளாக நடிக்கின்றனர். இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில், அதாவது தாத்தா, தந்தை, 2 மகன்கள் என நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இதில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்து கொண்ட அனுஷ்கா சர்மா, கடைசியாக ஷாருக்கானின் ‘ஸீரோ’ என்ற படத்தில் நடித்திருந்தார். 8 வருடமாகத் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இப்போது அல்லு அர்ஜுன் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.














