​சாம்சங் ஆலையில் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பேரணி சென்ற தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது

0
25

 சாம்சங் ஆலை​யில் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட 27 தொழிலா​ளர்​களுக்கு மீண்​டும் பணி வழங்க வலி​யுறுத்​தி, தலை​மைச் செயல​கம் நோக்கி பேரணி சென்ற 500-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் குடும்​பத்​தினருடன் கைது செய்​யப்​பட்​டனர்.

காஞ்​சிபுரம் மாவட்​டம், சுங்​கு​வார்​சத்​திரம் பகு​தி​யில் சாம்சங் ஆலை இயங்கி வரு​கிறது. இங்கு ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் வேலை செய்​து​வரும் நிலை​யில், ஊதிய உயர்​வு, தொழிற்​சங்க அங்​கீ​காரம், போனஸ் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கடந்த ஆண்டு 800-க்கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அவர்​களில் சிஐடியு தொழிலா​ளர்​கள் 27 பேரை சாம்சங் நிர்​வாகம் பணி​யிடை நீக்​கம் செய்​தது. இதைத்​தொடர்ந்து அரசு தரப்​பில் பேச்​சு​வார்த்தை நடத்தி போராட்​டத்தை கைவிட்ட, தொழிலா​ளர்​கள் பணி செய்து வரு​கின்​றனர்.

சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட 27 தொழிலா​ளர்​களுக்கு மீண்​டும் பணி வழங்​கப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் சி.​வி.கணேசன் வாக்​குறுதி அளித்​தார்.

ஆனால், பல மாதங்​களைக் கடந்​தும், சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட தொழிலா​ளர்​களை சாம்சங் நிர்​வாகம் பணி​யில் சேர்க்​க​வில்​லை. இந்த விவ​காரத்​தில் தொழிலா​ளர் நலத்​துறை அதி​காரி​கள் நடவடிக்கை எடுக்​காத​தால், சிஐடியு மாநில துணைச் செய​லா​ளர் முத்​துக்​கு​மார் தலை​மை​யில் 500-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள், தங்​களது குடும்​பத்​தினருடன் சுங்​கு​வார்​சத்​திரம் காந்தி சிலை பகு​தியி​லிருந்து தலை​மைச் செயல​கம் நோக்கி நடைபயணம் புறப்​பட்​டனர்.

காவல்​துறை​யினர் இதற்கு அனு​மதி மறுத்​ததையடுத்​து, தடையை மீறி, குடும்​பத்​துடன் பேரணி புறப்​பட்ட தொழிலா​ளர்​களை கைது செய்ய முற்​பட்​ட​தால், சாலை​யில் அமர்ந்து போராட்​டம் நடத்​தினர். பின்​னர், பேச்​சு​வார்த்தை நடத்தி தொழிலா​ளர்​களை கைது செய்து தனி​யார் திருமண மண்​டபத்​துக்கு அழைத்​துச் சென்​றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here