தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி நடைபெறுவதால் நாளை 13 ரயில்களின் சேவையில் மாற்றம்

0
21

ஜோலார்​பேட்டை – தொட்​டம்​பட்டி இடையே தானியங்கி சிக்​னல் அமைக்​கும் பணி நடை​பெறு​வ​தால், 13 ரயில்​களின் சேவை​யில் நாளை மாற்​றம் செய்​யப்பட உள்​ளது.

இதன்​படி, அரக்​கோணம் – சேலத்​துக்கு நாளை ( 24-ம் தேதி) அதி​காலை 5.15 மணிக்கு இயக்​கப்​படும் மெமு விரைவு ரயில், சேலம் – அரக்​கோணத்​துக்கு அதே​நாளில் பிற்​பகல் 3.30 மணிக்கு இயக்​கப்​படும் மெமு விரைவு ரயில், கோவை – சென்னை சென்ட்​ரலுக்கு அன்றைய தினம் காலை 6.20 மணிக்கு இயக்​கப்​படும் இன்​டர்​சிட்டி விரைவு ரயில், சென்னை சென்ட்​ரல் – கோவைக்கு பிற்​பகல் 2.30 மணிக்கு இயக்​கப்​படும் இன்​டர்​சிட்டி விரைவு ரயில், ஈரோடு – ஜோலார்​பேட்​டைக்கு அதே​நாளில் காலை 6 மணிக்கு இயக்​கப்​படும் பாசஞ்​சர் ரயில், ஜோலார்​பேட்டை – ஈரோடுக்கு பிற்​பகல் 2.45 மணிக்கு இயக்​கப்​படும் பாசஞ்​சர் ரயில் ஆகிய 6 ரயில்​கள் ரத்து செய்​யப்பட உள்​ளன.

வந்​தே ​பாரத் ரயில் தாமதம்

சென்னை சென்ட்​ரல் – கோவைக்கு நாளை மதி​யம் 2.15 மணிக்கு புறப்​பட​ வேண்​டிய வந்​தே ​பாரத் ரயில், இரண்டு பணி நேரம் தாமத​மாக மாலை 4.15 மணிக்கு புறப்​படும்.

கோவை – சென்னை சென்ட்​ரலுக்கு நாளை பிற்​பகல் 3.15 மணிக்கு புறப்பட வேண்​டிய கோவை விரைவு ரயில், 2 மணி நேரம் தாமத​மாக மாலை 5.15 மணிக்கு புறப்​படும்.

இதுத​விர, 2 விரைவு ரயில்​கள் ஒன்​றரை மணி நேரம் இடை​யில் ஆங்​காங்கே நின்று செல்​லும். 3 ரயில்​கள் மாற்​றுப் ​பாதை​யில் இயக்​கப்பட உள்​ளன. இத்​தகவல் தெற்கு ரயில்வே செய்​திக் ​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here