தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சென்ற கார் விபத்து: எஸ்ஐ உட்பட 4 பேர் காயம்

0
19

தேர்தல் பறக்​கும் படை அதி​காரி​கள் சென்ற கார் விபத்​தில் சிக்​கிய​தில் எஸ்​.ஐ. உட்பட 4 பேர் காயம் அடைந்​தனர்.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், அரசி​யல் கட்​சி​யினர் பணம், பரிசுப் பொருட்​களை கொடுத்து வாக்​காளர்​களை கவர்ந்து விடக்​கூ​டாது என்​ப​தில் தேர்​தல் ஆணை​யம் உறு​தி​யாக உள்​ளது.

அதன்​படி, சட்ட விரோத பணப்​பரி​மாற்​றத்​தைத் தடுக்க தேர்​தல் பறக்​கும் படை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த படை​யினர் வாகன சோதனை மற்​றும் தணிக்​கை​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இவர்​களு​டன் போலீ​ஸாரும் ஒருங்​கிணைந்து பணியாற்​றுகின்​றனர். இந்​நிலை​யில், புழல் சூரப்​பட்டு அருகே 200 அடிசாலை​யில் மாதவரம் சட்டப்​பேரவை தொகுதி பறக்​கும் படை அதி​காரி​கள் நேற்று முன்​தினம் காரில் சென்​றனர்.

அப்​போது, ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த கார், சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்​துக்​குள்​ளானது. இதில், காரில் இருந்த பறக்​கும் ​படை அதி​காரி சுரேந்​தர், போலீஸ் எஸ்.ஐ. ராமச்​சந்​திரன், காவலர் ஆரிப், வீடியோகி​ராபர் விஸ்​வ​நாதன் ஆகிய 4 பேர் காயம் அடைந்​தனர்.

உடனடி​யாக அவர்​கள் மீட்​கப்​பட்​டு, ரெட்​டேரி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டனர். இந்த விபத்து தொடர்​பாக போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் விசாரித்து வரு​கின்​றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here