சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடைக்கால கேப்டனாக இஷான் கிஷன் அறிவிப்பு | IPL 2026

0
94

வரும் 28-ம் தேதி ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் தொடங்க உள்ளது. இந்தச் சூழலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடைக்கால கேப்டனாக இஷான் கிஷன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ், காயம் காரணமாக சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், இந்த சீசனின் தொடக்கத்தில் சில போட்டிகளை அவர் தவறவிடக்கூடும் சூழல் நிலவுகிறது. காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் சன்ரைசர்ஸ் அணியுடன் கம்மின்ஸ் இணையும் வரையில் இந்த சீசனில் அந்த அணியை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் கேப்டனாக வழிநடத்துகிறார். அந்த அணியின் துணை கேப்டனாக அபிஷேக் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சீசனில் தான் இஷான் கிஷன், சன்ரைசர்ஸ் அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.

கடந்த 2024 முதல் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கம்மின்ஸ் செயல்பட்டு வருகிறார். அந்த சீசனில் இறுதிப் போட்டி வரை தனது அணியை முன்னேற செய்தார். கடந்த சீசனில் ஆறாம் இடம் பிடித்திருந்தது சன்ரைசர்ஸ். அதிரடி பேட்ஸ்மேன்கள் அதிகம் நிறைந்த சன்ரைசர்ஸ் அணி, இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் நடப்பு ஐபிஎல் சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடுகிறது.

இந்த ஆட்டம் பெங்களுருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here