தமிழகத்தில் 8.65 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க படிவம் விநியோகம்

0
23

தமிழகத்​தில் உள்ள முதியோர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​கள் 8.65 லட்​சம் பேர் வீட்​டிலிருந்தே வாக்​களிப்​ப​தற்​கான படிவங்​கள் விநி​யோகிக்​கப்​பட்டு வரு​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களிக்க, வாக்​குச்​சாவடிக்கு வர முடி​யாத 85 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​கள் மற்​றும் 40 சதவீதத்​துக்கு மேல் உடல் பாதிப்​புடைய மாற்​றுத் திற​னாளி​களுக்கு வீட்​டிலிருந்தே தபால் வாக்கு மூலம் வாக்​களிக்க தேர்​தல் ஆணை​யம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதற்​கு, தேர்​தல் அறி​விப்பு வெளி​யான நாளி​லிருந்து 5 நாட்​களுக்​குள் தொடர்​புடைய தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலருக்கு 12டி படிவம் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

தமிழகத்​தில் தற்​போது, 85 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​கள் 4 லட்​சம் பேர், 100 வயதுக்கு மேற்​பட்ட வாக்​காளர்​கள் 2,530 பேர், மாற்​றுத் திற​னாளி​கள் 4.63 லட்​சம் பேர் என மொத்​தம் 8.65 லட்​சம் பேர் உள்​ளனர்.

இவர்​கள் தபால் வாக்கு செலுத்த ஏது​வாக, வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் தகு​தி​யுள்ள வாக்​காளர்​களின் வீடு​களுக்​குச் சென்று படிவங்​களை வழங்​கி, பூர்த்தி செய்த படிவங்​களை பெற்று வரு​கின்​றனர்.

வீட்​டில் இல்​லாதவர்​களின் வீடு​களுக்கு மீண்​டும் ஒரு​முறை செல்ல உள்​ளனர்.

2 முறை​யும் வாக்​காளர் வீட்​டில் இல்​லை​யெனில், அவர் தபால் வாக்​களிக்க விருப்​பமற்​றவ​ராகக் கருதப்​படு​வார் என்று தேர்​தல் நடத்​தும் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

பின்​னர், இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்ட பிறகு, ஒவ்​வொரு​வரின் வீடு​களுக்கு சென்​று, வாக்​குச்​சாவடி அமைப்பை ஏற்​படுத்​தி, வாக்​களிக்க வைப்​ப​தற்​கான ஏற்​பாடு​களை அந்​தந்த தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here