வேளாண் பொருட்களுக்கு ஊக்கத் தொகை: மத்திய அரசின் உத்தரவுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

0
24

விவ​சா​யிகள் விளைவிக்​கும் வேளாண் பொருட்​களுக்கு மத்​திய அரசு நிர்​ண​யித்​துள்ள குறைந்​த​பட்ச ஆதார விலையை விட, மாநிலஅரசுகள் கூடு​தலாக ஊக்​கத்​தொகை வழங்​கக்​கூ​டாது என, மத்​திய அரசு பிறப்​பித்​துள்ள உத்​தர​வுக்​கு, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலா மணி வெளி​யிட்ட அறிக்​கை: கேரள மாநில எம்​.பி. ஜான் பிரிட்​டாஸ் நாடாளு​மன்​றத்​தில் எழுப்​பிய கேள்விக்​கு, பதிலளித்த மத்​திய நிதித்​துறை அமைச்​சகம், விவ​சா​யிகள் விளைவிக்​கும் பொருட்​களுக்கு மத்​திய அரசு நிர்​ண​யித்​துள்ள குறைந்​த​பட்ச ஆதார விலைக்கு மேல் மாநில அரசுகள் எவ்வித கூடு​தல் தொகை​யை​யும் வழங்​கக் கூடாது என்​று, அனைத்து மாநில தலைமை செயலர்​களுக்​கும் ஏற்​க​னவே கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக தெரி​வித்​துள்​ளது.

மேலும், கேரளா போன்ற மாநிலங்​கள் தற்​போது வழங்கி வரும் ஊக்​கத் தொகையை நிறுத்​து​வது குறித்து பரிசீலிக்க வேண்​டும். நாடு முழு​வதும் 22 விளைபொருட்​களுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட விலைக்கு மேல் எவ்​வித தொகை​யை​யும் அரசு ஆதரிக்​க​வில்லை என்​றும் மத்​திய அரசு திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளது.

வேளாண் விளைபொருட்​களுக்​கான உற்​பத்தி செலவு என்​பது நாடு முழு​வதும் ஒரே சீராக இருப்​ப​தில்​லை.

மாநிலத்​திற்கு மாநிலம் மாறு​படும் நிலை​யில், முதலீட்​டுக்​கான வட்டி, குடும்ப உழைப்பு உள்​ளிட்ட அனைத்து செல​வு​களை​யும் கணக்​கில் கொள்​ளாமல், ஒரு பகு​தியை மட்​டும் கணக்​கிட்டு அறிவிக்​கப்​படும் விலை​யால் விவ​சா​யிகள் பெரும் இழப்​பைச் சந்​தித்து வரு​கின்​றனர்.

இந்த இழப்பை ஈடு​கட்​ட​வே, அந்​தந்த மாநில அரசுகள் தங்​களின் நிதி நிலை​மைக்கு ஏற்ப ஊக்​கத் தொகைகளை வழங்​கு​கின்​றன. எனவே, விவ​சா​யிகளைப் பாதிக்​கும் இந்த உத்​தரவை மத்​திய அரசு உடனடி​யாக கைவிட வேண்​டும். இவ்​வாறு அதில்​ தெரி​வித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here