320 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை கொடுத்துவிட்டு 1,071 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொய்: ராமதாஸ், அன்புமணி குற்றச்சாட்டு

0
22

மருத்துவர்கள் 320 பேருக்கு மட்​டுமே பணி நியமன ஆணை வழங்​கி​விட்​டு, 1071 மருத்​து​வர்​களுக்கு பணி நியமன ஆணை வழங்​கப்​பட்​டுள்​ள​தாக திமுக அரசு பொய் சொல்​கிறது என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி ஆகியோர் தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் இருவரும் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ராம​தாஸ்: தமிழகம் முழு​வதும் உள்ள அரசு மருத்​து​வ​மனை​களுக்கு 1,100 உதவி மருத்​து​வர்​களை தேர்​தெடுக்க, விண்​ணப்​பித்​தவர்​களுக்கு போட்​டித் தேர்வு நடத்​தப்​பட்​டு, தேர்ச்சி பெற்​றவர்​களுக்கு சான்​றிதழ் சரி​பார்ப்பு செய்​யப்​பட்டு 1,071 பேர் பணிக்கு தேர்வு செய்​யப்​பட்​டனர்.

கடந்த 13-ம் தேதி 1,071 பேருக்கு கலந்​தாய்வு நடத்​தப்​பட்​ட​தில் 320 பேருக்கு மட்​டுமே பணி நியமன ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது. மற்ற 751 பேருக்கு வருங்​காலத்​தில் மருத்​து​வர் பணி​யிடங்​கள் காலி​யா​னால், அப்​போது கலந்​தாய்வு நடத்தி நியமன ஆணை​கள் வழங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பணி நியமன ஆணை வழங்​கப்​பட்​ட​வர்​களில் இட ஒதுக்​கீடு முறை பின்​பற்​றப்​பட்​டுள்​ளதா என சுகா​தா​ரத் துறை தெளிவுபடுத்த வேண்​டும்.

ஒரே தகு​தி​யுடைய மருத்​து​வர்​களில் சுமார் 70 சதவீதம் பேருக்கு துரோகம் செய்​வது சரியல்ல. எதில் வேண்​டு​மா​னாலும் அரசி​யல் செய்​ய​லாம் என்ற நிலைக்கு திமுக வந்​திருப்​பது அதன் தோல்வி பயத்​தையே வெளிப்​படுத்​துகிறது.

அன்​புமணி: தமிழக அரசு மருத்​து​வ​மனை​களுக்கு 1,100 மருத்​து​வர்​களை நியமிக்க நடத்​தப்​பட்ட போட்​டித் தேர்​வு​களில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 320 பேருக்கு மட்​டுமே பணி நியமன ஆணை வழங்​கப்​பட்​டுள்ள நிலை​யில், 1,071 பேருக்கு ஆணை​கள் வழங்​கப்​பட்​டிருப்​ப​தாக அப்​பட்​ட​மான பொய்யை அரசு கூறி​யிருக்​கிறது.

மருத்​து​வர்​கள் நியமனத்​தில் மோசடிகளை அரங்​கேற்றி 751 மருத்​து​வர்​களுக்கு திமுக அரசு துரோகம் செய்​திருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. ஆணை வழங்​கப்​பட்​டுள்ள 320 பேருக்​கும் எந்த அடிப்​படை​யில் அவை வழங்​கப்​பட்டன என்​பதும் தெரிய​வில்​லை.இந்த நடை​முறை​யில் எந்த வெளிப்​படைத்​தன்​மை​யும் கடைபிடிக்​கப்​பட​வில்​லை.

தேர்​தல் ஆணை​யத்​தின் அனு​மதி பெற்று மீத​முள்ள 751 பேருக்​கும் பணி நியமன ஆணை வழங்​கப்பட வேண்​டும். இதை திமுக அரசு செய்​யத் தவறி​னால், ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட பிறகு இந்த நியமனங்​களில் நடந்த முறை​கேடு​கள் குறித்து விசா​ரணை நடத்​தப்​படும். தகு​தி​யுள்ள மருத்​து​வர்​கள் அனை​வருக்​கும் பணி நியமன ஆணை வழங்​கு​வதை பாமக உறு​தி செய்​யும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here