தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ரூ.1,035 கோடிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு: 1.3 லட்சம் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

0
21

தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற தேசிய லோக் அதாலத்​தில் 1 லட்​சத்து 3 ஆயிரத்து 366 நிலுவை வழக்​கு​களுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.1,034.93 கோடி இழப்​பீ​டாக வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு சார்​பில் தேசிய லோக் -அதாலத் தமிழகம் முழு​வதும் சனிக்​கிழமை நடை​பெற்​றது. மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு தலை​வரும், உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யு​மான எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி அறி​வுறுத்​தலின்​படி, மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு செயல் தலை​வரும் மூத்த நீதிப​தி​யு​மான ஆர்.சுரேஷ்கு​மார் மேற்​பார்​வை​யில் நடத்​தப்​பட்ட இந்த லோக்​-அ​தாலத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் 5 அமர்​வு​களும், உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் 2 அமர்​வு​களும் ஏற்​படுத்​தப்​பட்டு நிலுவை வழக்​கு​கள் விசா​ரிக்​கப்​பட்​டன.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஓய்வு பெற்ற நீதிப​தி​கள் டி.என்​.வள்​ளி​நாயகம், ஏ.ராம மூர்த்​தி, ஜி.சொக்​கலிங்​கம் எம்​.ஜெய​பால், பி.கோகுல்​தாஸ் ஆகியோர் தலை​மை​யிலும், உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் நீதிபதி பி.பி.​பாலாஜி, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்​.​ராமலிங்​கம் தலை​மை​யிலும் நிலுவை வழக்​கு​கள் விசா​ரிக்​கப்​பட்​டன.

இதே​போல மாவட்ட மற்​றும் தாலுகா அளவில் மொத்​தம் 516 அமர்​வு​கள் ஏற்​படுத்​தப்​பட்டு மொத்​தம் 1 லட்​சத்து 3 ஆயிரத்து 366 நிலுவை வழக்​கு​களுக்கு நேற்று ஒரே நாளில் தீர்வு காணப்​பட்​டன.

இதன்​மூலம் மொத்​தம் ரூ.1034 கோடியே 93 லட்​சத்து 46 ஆயிரத்து 325-க்​கான காசோலைகள் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்​டன.

மாநிலம் முழு​வதும் நடை​பெற்ற இந்த லோக்​-அ​தாலத் ஏற்​பாடு​களை மாநில சட்​டப் ​பணி​கள் ஆணைக்​குழு உறுப்​பினர் செயலரும், மாவட்ட நீதிப​தி​யு​மான எஸ்​.​பால​கிருஷ்ணன் தலை​மை​யில் அந்​தந்த மாவட்​ட நீதிப​தி​கள்​ செய்​திருந்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here