துணை ராணுவப் படையினர், போலீஸார் திருவள்ளூர், பல்லாவரத்தில் கொடி அணிவகுப்பு

0
24

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் விரை​வில் நடை​பெறவுள்ள நிலை​யில், திரு​வள்​ளூர், பல்லாவரத்தில் நேற்று துணை ராணுவப் படை​யினர், போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடை​பெற்​றது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் தேதியை விரை​வில் தேர்​தல் ஆணை​யம் அறிவிக்க உள்​ளது. தேதி அறிவிக்​கப்​பட்ட உடனேயே தேர்​தல் நடத்தை விதி​முறை​களும் அமலுக்கு வந்​து​விடும்.

ஆகவே, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் தேர்​தல் பணி மேற்​கொள்ள துணை ராணுவப் படை​யினர் 90 பேர் உத்​தரபிரதேச மாநிலத்​தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்​னை, பெரம்​பூர் ரயில் நிலை​யத்​துக்கு கடந்த 9-ம் தேதி வருகை புரிந்​தனர்.

பிறகு, அவர்​கள் திரு​வள்​ளூர் அருகே கனகவல்​லிபுரம் கிராமத்​தில் செயல்​பட்டு வரும் காவலர் பயிற்சி பள்​ளி​யில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், வாக்​காளர்​களின் பாது​காப்பை உறு​திப்​படுத்​தும் வகை​யில், நேற்று திரு​வள்​ளூரில் திரு​வள்​ளூர் மாவட்ட காவல் கூடு​தல் கண்​காணிப்​பாளர் கல்​யாண், திரு​வள்​ளூர் நகர காவல் ஆய்​வாளர் தாமோதரன் ஆகியோர் தலை​மை​யில் துணை ராணுவ படை​யினர் 90 பேர், 40 போலீ​ஸார் பங்​கேற்ற கொடி அணிவகுப்பு நடை​பெற்​றது.

திரு​வள்​ளூர், ஜெ.என்​.​சாலை​யில் காம​ராஜர் சிலை அருகே தொடங்​கிய இந்த கொடி அணிவகுப்பு திரு​வள்​ளூர் பேருந்து நிலை​யம், தேரடி, மோதிலால் தெரு ஆகிய முக்​கிய வீதிகள் வழி​யாக சென்று வடக்கு ராஜவீதி பகு​தி​யில் முடிவுற்​றது.

பல்​லா​வரம் சட்​டப்​பேரவை தொகு​திக்கு 90 துணை ராணுவத்​தினர் வரவைக்​கப்​பட்​டு, பம்​மல், நல்ல தம்பி சாலை​யில் உள்ள சமு​தாய நலக்​கூடத்​தில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

மக்கள் மத்தியில் விழிப்​புணர்வு

துணை ராணுவ படை​யினர்– போலீ​ஸார் இணைந்​து, நேற்று அனகாபுத்​தூரில் 2 கிமீ துாரத்​துக்கு கொடி அணிவகுப்பு நடத்​தினர். பல்​லா​வரம் – குன்​றத்​தூர் சாலை​யில், அனகாபுத்​தூர் பேருந்து நிலை​யத்​தில் இருந்து தொடங்​கிய இந்த அணிவகுப்​பில் 30 துணை ராணுவ படை​யினர், 50 போலீ​ஸார் பங்​கேற்று பொது​மக்​களிடையே விழிப்​புணர்வு ஏற்​படுத்​தினர்.

பொது​மக்​கள் அச்​சமின்றி தங்​களது ஜனநாயகக் கடமையை ஆற்ற முன்வர வேண்​டும் என்ற விழிப்​புணர்வை ஏற்​படுத்​துதல், தேர்​தல் நேரத்​தில் வன்​முறை​யில் ஈடுபட முயலும் நபர்​களுக்​கும், விதி​மீறல்​களில் ஈடு​படு​பவர்​களுக்​கும் ஒரு கடுமை​யான எச்​சரிக்​கை​யாக இந்த அணிவகுப்பு அமைந்​தது.மேலும் பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் வாக்​காளர்​களின் பாது​காப்பை உறு​திப்​படுத்​தும் வகை​யில் இந்த அணிவகுப்பு நடத்​தப்​பட்​டது.

மாமல்​லபுரத்தில்…

செங்​கை மாவட்​டம், மாமல்​லபுரத்​துக்கு 55 வீரர்​கள் கொண்ட மத்​திய ரிசர்வ் காவல் படை​யினர் வருகை தந்​துள்​ளனர்.

மேலும், மத்​திய ரிசர்வ் காவல் படை வீரர்​கள், மாமல்​லபுரம் காவல் நிலை​யத்​திலிருந்து டிஎஸ்பி அறிவழகன் தலை​மை​யில் பாது​காப்பு ஒத்​தி​கை​யாக கொடி அணிவகுப்பு மேற்​கொண்​டனர். ஐந்​துரதம் வழி​யாக சென்று வெண்​ணை உருண்​டைபாறை அருகே அணிவகுப்​பை நிறைவு செய்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here