துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணி​ 2027-ல் நிறைவடையும்: தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தகவல்

0
22

சென்னை துறைமுகம் – மதுர​வாயல் 2 அடுக்கு மேம்​பாலப் பணி​கள் 2027-ம் ஆண்​டில் நிறைவடை​யும் என்று தேசிய நெடுஞ்​சாலை ஆணைய மண்டல அலு​வலர் வீரேந்​தர் சாம்​பி​யால் தெரி​வித்​தார்.

சென்னை துறைமுகம் – மதுர​வாயல் இடையே 21 கி.மீ. தூரம் கொண்ட புதிய 4 வழித்தட 2 அடுக்கு மேம்​பாலப் பணி​கள் முழு​வீச்​சில் நடந்து வரு​கின்​றன.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் மண்டல அலு​வலர் வீரேந்​தர் சாம்​பி​யால் கூறிய​தாவது: தொடக்​கத்​தில் ஒற்றை அடுக்​காக திட்​ட​மிடப்​பட்ட இப்​பாலம், மாநில அரசின் கோரிக்​கையை ஏற்​று, 2 அடுக்​காக மாற்​றப்​பட்​டுள்​ளது.

உள்​ளூர் நகரப் போக்​கு​வரத்​துக்​காக முதல் அடுக்​கு, சென்னை துறை​முகத்​துக்கு செல்​லும் கனரக சரக்கு வாக​னங்​களுக்​காக பிரத்​யேக​மாக 2-வது அடுக்கு அமைக்​கப்​படு​கிறது.

நகரின் முக்​கிய பகு​தி​களில் வாக​னங்​கள் பாலத்​தில் ஏறவும், இறங்​க​வும் வசதி​யாக 13 சாய்​தளங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன. நேப்​பியர் பாலம் பகு​தி​யில் அதிநவீன கேபிள் பாலம் அமைக்​கப்​படு​கிறது.

போக்​கு​வரத்து போலீ​ஸார் அனு​ம​தி​யுடன் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என தின​மும் 11 மணி நேரம் கட்​டு​மானப் பணி​கள் நடந்து வரு​கின்​றன. இதை 16 மணி நேர​மாக அதி​கரிக்க மாநில அரசிடம் அனு​மதி கேட்​டுள்​ளோம். 2027 டிசம்​பருக்​குள் திட்​டம் நிறைவடை​யும்.

நெடுஞ்​சாலை பணி​கள்

சென்னை – பெங்​களூரு விரைவுச் சாலை (262 கி.மீ.) திட்​டத்​தில் கர்​நாடகப் பகுதி பணி​கள் முடிந்​து​விட்​டன. தமிழகத்​தில் உள்ள 106 கி.மீ. தொலை​வில் 3 தொகுப்​பு​களின் பணி​கள் முடி​யும் நிலை​யில் உள்​ளன. தமிழகத்​தில் நெடுஞ்​சாலை உள்​கட்​டமைப்பை மேம்​படுத்த, கடந்த 10 ஆண்​டு​களில் தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்​துள்​ளது.

தற்​போது ரூ.40 ஆயிரம் கோடி மதிப்​பிலான பணி​கள் நடை​பெறுகின்​றன. தமிழகத்​தில் 77 இடங்​களில் உள்ள தேசிய நெடுஞ்​சாலை ஆணைய சுங்​கச் சாவடிகள் மூலம் கடந்த நிதி ஆண்​டில் ரூ.4,300 கோடி வசூலானது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஆணை​யத்​தின் சென்னை திட்ட இயக்​குநர் சிவம் சர்மா கூறும்​போது, ‘‘பிரம்​மாண்​ட​மான வார்ப்​புத் தளங்​களில் பாலத்​தின் கான்​கிரீட் பாகங்​கள் முன்​கூட்​டியே முழு​வீச்​சில் தயாரிக்​கப்​படு​கின்​றன. இதனால், மழைக்​காலத்​தி​லும் இடையூறின்றி மேம்​பால கட்​டு​மானப் பணி நடை​பெறும்’’ என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here