அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

0
23

காஸ் தட்​டுப்​பாடு வரும்​பட்​சத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் மின்​சார ஸ்டவ், விறகு அடுப்​பு​களை தயார் நிலை​யில் வைக்​கு​மாறு சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

சைதாப்​பேட்டை எம்​எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி ரூ.1.15 கோடி​யில், சைதாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள காத்​திருப்​புக் கூடத்தை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று திறந்து வைத்​தார்.

முதல்​வர் மருத்​து​வக் காப்​பீட்டு திட்ட நிதி​யின் மூலம் இயன்​முறை பயிற்​றுநர் நியமிக்​கப்​பட்​டு, ரூ.1.50 லட்​சத்​தில் புதிய இயன்​முறை கருவி​களின் பயன்​பாடு, யோகா – இயற்கை மருத்​து​வப் பிரிவுக்கு ஒரு மருத்​து​வர் மற்​றும் ஒரு மருத்​துவ உதவி​யாள​ருடன் கூடிய சேவையை தொடங்கி வைத்​தார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: காஸ் தட்​டுப்​பாடு தொடர்​பாக துறைச் செயலர், அனைத்து மருத்​து​வக் கல்​லூரி டீன்​கள், இணை இயக்​குநர்​கள், துணை இயக்​குநர்​கள், அலு​வலர்​களு​டன் ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தப்​பட்​டது.

இந்த வாரத்​துக்கு காஸ் தட்​டுப்​பாடு பிரச்​சினை இல்​லை. கடுமை​யான தட்​டுப்​பாடு வரும்​பட்​சத்​தில், இதற்கு மாற்று ஏற்​பா​டாக எலெக்ட்​ரிக் ஸ்டவ், விறகு அடுப்​பு​கள் போன்​றவற்றை தயார் நிலை​யில் வைக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here