ஏப்ரலில் ‘கருப்பு’ வெளியீடு: சாய் அபயங்கர் தகவல்

0
23

சூர்யாவின் ‘கருப்பு’ படம் ஏப்ரலில் வெளியாகும் என்று அதன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட போது ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசியிருக்கிறார்.

அதில் சாய் அபயங்கர், “ஏப்ரல் மாதத்தில் ‘கருப்பு’ வெளியாகும். இப்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் வெறித்தனமாக போய்க் கொண்டிருக்கிறது. அப்படத்தில் கருப்பசாமி உள்ளிட்ட சில விஷயங்கள் இருக்கிறது. அதனை முன்வைத்து நிறைய விஷயங்களை செய்து வருகிறோம். தமிழ் கலாச்சாரத்தை உயர்த்து விதத்தில் எனது பின்னணி இசை இருக்கும் என கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் சூர்யா உடன் இப்படத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here