டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

0
17

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, முன்​னாள் சாம்​பிய​னான இங்​கிலாந்​துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறுகிறது.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான நடப்பு சாம்பியனான இந்​திய அணி லீக் சுற்​றில் அனைத்து ஆட்டங்​களி​லும் வெற்றி கண்ட நிலை​யில் சூப்​பர் 8 சுற்​றில் தென் ஆப்​பிரிக்​கா​விடம் அதிர்ச்சி தோல்வி கண்​டிருந்​தது. இதைத் தொடர்ந்து ஜிம்​பாப்​வே, மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணியை வீழ்த்தி அரை இறு​திக்​குள் நுழைந்​தது.

2010, 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான இங்​கிலாந்து அணி லீக் சுற்​றில் மேற்கு இந்​தி​யத் தீவு​களிடம் தோல்வி அடைந்த நிலை​யில் மற்ற 3 ஆட்​டங்​களி​லும் வெற்​றியை பதிவு செய்திருந்​தது. தொடர்ந்து சூப்​பர் 8 சுற்​றில் இலங்​கை, பாகிஸ்​தான், நியூஸிலாந்து அணி​களை வீழ்த்தி அரை இறுதி சுற்​றில் கால்​ப​தித்து இருந்​தது.

சூப்​பர் 8 சுற்​றில் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக ஏற்​பட்ட மோச​மான தோல்விக்​குப் பிறகு, இந்​திய அணி​யின் பேட்டிங் வரிசை​யில் சில மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. டாப் ஆர்​டர் பேட்​டர்​கள் மூவரும் இடதுகை வீரர்​களாக இருப்​பது இந்​திய அணிக்கு பின்​னடைவை ஏற்​படுத்​திய நிலை​யில், தொடக்க ஆட்​டக்​கார​ராக சஞ்சு சாம்​சன் கொண்​டு​வரப்​பட்​டார்.

இதன் மூலம் டாப் ஆர்​டரில் தொடர்ந்த வலதுகை இடதுகை காம்​பினேஷன் பிரச்​சினையும் முடிவுக்கு வந்தது. அதன் பின்​னர் இந்​திய அணி​யும் சிறப்​பாக செயல்பட்டு வரு​கிறது. கால் இறுதி போட்டி போன்று அமைந்த மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான ஆட்டத்தில் சஞ்சு சாம்​சன் கடைசி வரை களத்​தில் நின்று 97 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றிக்கு உதவி​யிருந்​தார்.

எந்த ஒரு கட்​டத்​தி​லும் அவசரக​தி​யுடன் மட்​டையை சுழற்றாமல் கடைசி வரை பொறுமை​யாக விளை​யாடி இந்​திய அணி வெற்​றிக்​கோட்டை கடப்​ப​தற்கு உறுதுணையாக இருந்​தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு உயர்​மட்ட செயல் திறன் வெளிப்​படக்​கூடும். லீக் ஆட்டங்களில் அதிரடி காட்​டிய இஷான் கிஷன் சூப்​பர் 8 சுற்​றில் ஏமாற்​றம் அளித்​தார்.

இதே​போன்று தடு​மாறிவரும் அபிஷேக் சர்​மா, ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ராக அரை சதம் அடித்​திருந்​தார். ஆனால் மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் விரைவு​க​தி​யில் விளை​யாடி 10 ரன்​களில் வெளி​யேறி​யிருந்​தார். இவர்​கள் இரு​வரும் மீண்​டும் பார்​முக்கு திரும்​புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

திலக் வர்​மா, ஷிவம் துபே ஆகியோர் சிறந்த பார்​மில் உள்ளனர். சூர்​யகு​மார் யாதவ், ஹர்​திக் பாண்​டியா ஆகியோர் மீண்​டும் தாக்​குதல் ஆட்​டத்தை தொடுக்​கும் பட்​சத்​தில் அணி​யின் பலம் அதி​கரிக்​கும். பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் கடந்த ஆட்​டத்​தில் அர்​ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்​டி​யா, வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் ஓவருக்கு சராசரி​யாக தலா 10 ரன்​களுக்கு மேல் தாரை வார்த்​திருந்​தனர்.

அக்​சர் படேல் ஓவருக்கு சராசரி​யாக 8.80 ரன்​களை​யும் ஜஸ்பிரீத் பும்ரா சராசரி​யாக 9 ரன்​களை​யும் வழங்கியிருந்தனர். இதனால் பந்​து​வீச்சு திட்​டங்​களில் இந்திய அணி ஏதேனும் மாற்​றங்​களை மேற்கொள்ளக்கூடும். அக்​சர் படேல் அல்​லது வருண் சக்​ர​வர்த்தி நீக்​கப்​பட்டு குல்​தீப் யாதவ் சேர்க்​கப்பட வாய்ப்பு உள்​ளது.

ஹாரி புரூக் தலை​மையி​லான இங்​கிலாந்து அணி​யில் நடு​வரிசை பேட்​டிங் மற்​றும் பந்​து​வீச்சு கூட்​டணி பலமாக உள்ளது. இந்​திய அணி​யின் தொடக்க வீரர்​களுக்கு எதிராக இங்​கிலாந்து அணி சிறப்​பாக செயல்பட திட்டங்கள் வகுக்​கக்​கூடும். ஜோப்ரா ஆச்​சர் ‘ஷார்ட் பால்’ டெக்​னிக்கை பயன்​படுத்தி சஞ்சு சாம்​சனுக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.

ஏனெனில் கடந்த காலங்​களில் இங்​கிலாந்து அணிக்கு எதிரான ஆட்​டங்​களில் உடலை குறி​வைத்து வீசப்​பட்ட பந்துகளில் சஞ்சு சாம்​சன் தடு​மாறி உள்​ளார். அபிஷேக் சர்​மா​வின் விக்​கெட்டை வீழ்த்த பவர்​பிளே​வில் சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான வில் ஜாக்ஸை இங்​கிலாந்து அணி பயன்​படுத்​தக்​கூடும். இடது கை சுழற்​பந்து வீச்​சாள​ரான லியாம் டாவ்​சன், மணிக்​கட்டு சுழற்​பந்து வீச்​சாள​ரான ஆதில் ரஷித் ஆகியோ​ரும் இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு சவால் அளிக்​கக்​கூடும்.

இங்​கிலாந்து அணி​யின் பேட்​டிங்​கில் டாப் ஆர்​டர் வலுவாக இல்​லை. பில் சால்ட், ஜாஸ் பட்​லர் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. பில் சால்ட் 7 ஆட்​டங்​களில் 125 ரன்​கள் மட்​டுமே சேர்த்​துள்​ளார். ஜாஸ் பட்​லர் 62 ரன்​களே சேர்த்துள்​ளார். அவரது அதி​கபட்ச ஸ்கோர் 26 ஆக உள்​ளது. இன்றைய ஆட்​டம் முக்​கி​யத்​து​வம் வாய்ந்தது என்பதால் ஜாஸ் பட்​லர் சீராக ரன்​கள் சேர்ப்​ப​தில் கவனம் செலுத்​தக்​கூடும். மேலும் அவருக்கு ஐபிஎல் அனுபவங்​கள் உதவக்கூடும்.

ஒரு சதம், அரை சதத்​துடன் 228 ரன்​கள் சேர்த்​துள்ள ஹாரி புரூக், 191 ரன்​கள் எடுத்​துள்ள வில் ஜாக்ஸ் ஆகியோ​ருடன் ஜேக்​கப் பெத்​தேல், சேம் கரண், டாம் பேன்​டன் ஆகியோரும் பேட்​டிங்​கில் நம்​பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்​கின்​றனர். இவர்​கள் இந்திய அணி​யின் பந்​து​வீச்சு துறைக்கு நெருக்​கடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

மும்பை ஹீரோக்​கள்

இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான அரை இறுதி போட்டியையொட்டி மும்பை வான்​கடே மைதானத்​தில் இந்​திய அணி​யின் சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்​மா, ஹர்திக் பாண்​டி​யா, இஷான் கிஷன் ஆகியோர் சுமார் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக பேட்​டிங் பயிற்​சி​யில் ஈடுபட்டனர். இவர்​கள் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்​காக இந்த மைதானத்​தில் அதிக அளவி​லான ஆட்​டங்​களில் விளை​யாடி உள்​ளனர். இதனால் இவர்​கள் மீது அதிக எதிர்​பார்ப்பு உள்​ளது.

சிக்​கலில் வருண் சக்​ர​வர்த்தி

மும்பை வான்​கடே மைதானத்​தின் எல்​லைக்​கோடு​கள் சிறியவை என்​ப​தால் இந்​திய அணி​யின் சுழற்​பந்​து ​வீச்சாளர்​கள் வருண் சக்​கர​வர்த்​தி, அக்​‌சர் படேல் ஆகியோர் சிறிது தவறான லென்த்​தில் பந்​து​வீசி​னாலும் அது பாதக​மாக அமைந்​து​விடும்.

தென் ஆப்​பிரிக்​கா, மேற்​கிந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான ஆட்​டங்​களில் வருண் சக்​கர​வர்த்தி அதிக அளவி​லான ரன்களை தாரை ​வார்த்​திருந்​தார். இதனால் அவர், லைன் மற்​றும் லென்த்​தில் கவனம் செலுத்த வேண்​டிய கட்டாயத்தில் உள்​ளார்.

கடைசி 5 ஓவரில் கவனம்

நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இறு​திக்​கட்ட ஓவர்களில் இந்​திய அணி அதிக ரன்​களை விட்​டுக்​கொடுத்து வரு​கிறது. மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதிரான ஆட்​டத்​தில் கடைசி 5 ஓவர்​களி இந்​திய அணி 75 ரன்ளை தாரை வார்த்து இருந்​தது. இதனால் இந்த காலக்​கட்ட ஓவர்​களில் இந்​திய அணி கூடு​தல் கவனத்​துட​னும், புத்​தி​சாலித்​தனத்​துட​னும் செயல்பட வேண்​டியது அவசியம்.

பயன்​படுத்​தப்​பட்ட ஆடு​களம்

நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்​திய அணி 2-வது முறை​யாக மும்பை வான்​கடே மைதானத்​தில் விளையாட உள்​ளது. கடந்த மாதம் லீக் சுற்​றில் இங்கு அமெரிக்கா​வுடன் விளை​யாடிய இந்​திய அணி ஷாட்லிவான் சால்விக்​கின் மிதவேகப்​பந்து வீச்​சில் தடு​மாறி​யிருந்​தது.

தற்​போது அரை இறுதி போட்​டிக்கு பயன்​படுத்​தப்பட உள்ள ஆடு​களத்​தில் ஏற்​கெனவே 2 ஆட்​டங்​கள் விளை​யாடப்​பட்​டுள்​ளன. இதில் இங்​கிலாந்​துக்கு எதி​ராக மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது.

அந்த ஆட்​டத்​தில் 197 ரன்​கள் இலக்கை விரட்​டிய இங்கிலாந்து அணி 166 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து இருந்தது. மற்​றொரு ஆட்​டத்​தில் இத்​தாலிக்கு எதி​ராக 124 ரன்​கள் இலக்கை விரட்​டிய இங்​கிலாந்து அணி விக்​கெட் இழப்​பின்றி 12.4 ஓவர்​களில் வெற்றி கண்​டிருந்​தது.

3-வது முறை​யாக..

டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் தொடர்ந்து மூன்​றாவது முறை​யாக இந்​தியா – இங்​கிலாந்து அணி​கள் அரை இறுதியில் பலப்​பரீட்சை நடத்த உள்​ளன. கடந்த 2022, 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்​களி​லும் இரு அணிகளும் அரை இறு​தி​யில் மோதி இருந்​தன. இதில் 2022-ல் இங்​கிலாந்து அணி​யும், 2024-ல் இந்​திய அணி​யும் வெற்றி கண்​டிருந்​தன.

ஆடு​களம் எப்​படி?

மும்பை வான்​கேடே மைதானம் பொது​வாக பேட்​ஸ்​மேன்களுக்​குச் சாதக​மாகவே இருக்​கும். மைதானத்​தின் எல்​லைக்​கோடு​கள் அளவில் சிறியது என்​ப​தால் சிக்​ஸர் மழைக்கு வாய்ப்​புள்​ளது. எனினும், தொடக்​கத்​தில் பந்துகள் நன்கு ‘ஸ்​விங்’ ஆகும். இதை வேகப்​பந்து வீச்சாளர்​கள் பயன்​படுத்​திக் கொள்​ளக்​கூடும். பனிப்பொழிவை கருத்​தில் கொண்டு டாஸ் வெல்​லும் அணி முதலில் பந்​து​வீச்​சைத் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here