நில ஆவணம், பட்டா மாறுதல் அறிக்கை இணையவழி சேவை​ தொடக்கம்

0
13

வரு​வாய், பேரிடர் மேலாண்​மைத் துறை​யின் கீழ் இயங்​கிவரும் நில அளவை, மற்​றும் நில​வரித் திட்​டத் துறை​யால் இணை​ய​வழி ஆவணங்​களான ‘அ’ – பதிவேடு, சிட்டா மற்​றும் புலப்​படம் ஆகியவை இணை​ய​வழி பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

இந்த ஆவணங்​களின் விவரங்​களை ஒருங்​கிணைத்​து, நில உரிமை​தா​ரர்​களுக்கு ‘ஒருங்​கிணைந்த நில ஆவணம்’ (Integrated Land Record) என்ற சேவையை​யும், இணை​ய​வழி​யில் ஒரு புல எண்​ணில் நடை​பெறும் பட்டா மாறு​தல் விவரங்​களை பொது மக்​கள் தெரிந்து கொள்​ளும் வகை​யில் ‘பட்டா மாறு​தல் விவரங்​களின் அறிக்​கை’ (History of Patta Transfer) என்ற சேவையை​யும் வரு​வாய்த் துறை அமைச்​சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன் நேற்று தொடங்கி வைத்​தார்.

இந்த நிகழ்​வில், துறை செயலர் பெ.அ​மு​தா, நில நிர்​வாக ஆணை​யர் கஜலட்​சுமி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இந்த புதிய சேவை மூலம், நில உரிமை​தா​ரர்​கள் தங்​களது நிலம் சார்ந்த விவரங்​களை உள்​ளீடு செய்து https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணை​யதளத்​தில் ‘ஒருங்​கிணைந்த நில ஆவணத்தை பார்​வை​யிட்டு பதி​விறக்​கம் செய்யலாம்.

பட்டா மாறு​தல் விவர அறிக்​கையை பொருத்​தவரை, நில உரிமை​யாளர்​கள் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணை​யதளத்​தில் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற தலைப்பை தேர்வு செய்​து, தங்​கள் நிலம் சார்ந்த விவரங்​கள் மற்​றும் விவரம் தேவைப்​படும் தேதி​யினை தேர்வு செய்ய வேண்​டும்.

பின்​னர், பட்டா மாற்ற விவரக்கட்​ட​ண​மாக ஆண்டு ஒன்​றுக்கு ரூ.50 வீதம் மற்​றும் செய​லாக்க கட்​ட​ண​மாக ரூ.60 ஆகிய​வற்றை இணை​யம் வாயி​லாக செலுத்தி விண்​ணப்​பித்​து, ‘முந்​தைய பட்டா மாறு​தல் விவர அறிக்​கை’ யை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here