தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை 4 வழித்தட சாலைப் பணியை முதல்வர் ஆய்வு

0
12

நெடுஞ்​சாலைத் துறை சார்​பில், அண்ணா சாலை​யில் தேனாம்​ பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை ரூ.621 கோடி​யில் 3.20 கி.மீ.க்கு கட்​டப்​படும் நான்கு வழித்தட உயர்​மட்ட சாலை கட்​டு​மானப் பணியை முதல்​வர் ஸ்டா​லின் ஆய்வு செய்​தார்.

சென்னை, அண்ணா சாலை​யில் தேனாம்​பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை போக்​கு​வரத்து நெரிசலில் 3.20 கி.மீ. தூரத்​தைக் கடக்க 30 முதல் 45 நிமிடங்​கள் ஆகின்​றன.

இந்த நிலை​யில், போக்​கு​வரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகை​யில், எல்​டாம்ஸ் சாலை,எஸ்​ஐஇடி கல்​லூரி சாலை, நந்​தனம் சாலை உள்​ளிட்ட 7 முக்​கிய சாலை சந்​திப்​பு​களை கடக்​கும் வகை​யில், தேனாம்​பேட்​டை​யில் இருந்து சைதாப்​பேட்டை பேருந்து நிலை​யம் வரை 3.20 கி.மீ. தூரத்​துக்கு 16.61 மீட்​டர் அகலம் கொண்ட 4 வழித்தட உயர்​மட்ட சாலை அமைக்கும் பணிகள் நடை​பெற்று வருகிறது.

இந்​நிலை​யில், இந்த கட்​டு​மானப்​பணி​களை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று ஆய்வு செய்​தார். பணி​களை விரைந்து முடிக்​கு​மாறு அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​னார். அப்போது, அமைச்​சர்​கள் எ.வ.வேலு, மா.சுப்​பிரமணி​யன், தா.மோ.அன்​பரசன், நெடுஞ்​சாலை ​துறை செயலர் செல்​வ​ராஜ் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here