துபாய் விமான நிலையத்தில் சிக்கிய பி.வி.சிந்து பெங்களூரு திரும்பினார்

0
22

இங்​கிலாந்​தின் பர்​மிங்​காம் நகரில் நடைபெற​விருந்த ‘ஆல் இங்​கிலாந்து பாட்​மிண்​டன்’ தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய நட்​சத்​திர வீராங்கனை​யான பி.வி.சிந்து துபாய் வழி​யாக பயணம் மேற்​கொண்​டார். அப்​போது ஈரான்​-இஸ்​ரேல் மோதல் காரண​மாக துபாய் வான் எல்லை மூடப்​பட்​டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் பி.​வி.சிந்து துபாய் விமான நிலை​யத்​தில் பல மணிநேரம் சிக்​கித் தவித்​தார். தான் தங்​கி​யிருந்த இடத்துக்கு அரு​கிலேயே குண்​டு​வெடிப்​புச் சத்​தம் கேட்டதாக​வும், தனது பயிற்​சி​யாளர் அங்​கிருந்து தப்பி ஓட வேண்​டிய சூழல் ஏற்​பட்​ட​தாக​வும் பி.​வி.சிந்து சமூக வலை​தளங்​களில் பதி​விட்​டிருந்​தார்.

விமான பயணம் மேற்​கொள்ள முடி​யாத​தால் பர்மிங்காமில் நேற்று தொடங்​கிய பாட்​மிண்​டன் தொடரில் இருந்து பி.​வி.சிந்து வில​கி​னார். இந்​நிலை​யில் நேற்று துபா​யில் இருந்து பி.​வி.சிந்து பாது​காப்​பாக பெங்களூரு வந்து சேர்ந்​தார்.

இதுதொடர்​பாக அவர், தனது எக்ஸ் வலை​தளத்​தில் வெளியிட்​டுள்ள பதி​வில், “பெங்​களூரு​வில் உள்ள வீட்டுக்கு திரும்​பி​விட்​டேன். பாது​காப்​பாக உள்​ளேன். கடந்த சில நாட்​கள் மிக​வும் கடின​மும், குழப்​ப​மும் நிறைந்த​தாக இருந்​தன, ஆனால் என் வீட்​டுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மிக​வும் கடின​மான நேரத்​தில் எங்​களை நன்​றாக கவனித்துக் கொண்ட துபாய் அதி​காரி​கள், விமான நிலைய ஊழியர்​கள், குடியேற்ற அதி​காரி​கள் என ஒவ்​வொரு நபருக்​கும் மனமார்ந்த நன்​றியை தெரிவித்துக்கொள்​கிறேன்.

அவர்​களின் இரக்கம் மற்​றும் தொழில்​முறை மனப்​பாங்கு ஆகியவை வார்த்​தைகளால் சொல்ல முடி​யாததை விட அதி​கம். இப்​போது ஓய்​வெடுத்து அடுத்த கட்​டத்​தைப் பற்றி யோசிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here