அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் கொல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

0
16

அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலிய படைகள் நடத்​திய தாக்​குதலில் கொல்​லப்​பட்ட பள்​ளி மாணவிகள் உட்பட 165 பேருக்​காக வரிசை​யாகத் தோண்​டப்​பட்​டுள்ள கல்லறைகளின் புகைப்​படத்தை ஈரான் அரசு வெளி​யிட்​டுள்​ளது.

ஈரானின் மினாப் நகரில் உள்ள மிகப்பெரிய ராணுவ தளத்தை குறிவைத்து, கடந்த 28-ம் தேதி இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ராணுவ தளம் அருகே உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 165 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அரக்சி தனது ‘எக்​ஸ்’ சமூக வலை​தளத்​தில் மக்​களின் மனசாட்​சியை உலுக்​கும் ஒரு புகைப்​படத்​தைப் பகிர்ந்​துள்​ளார்.

அதில், திறந்​தவெளி மைதானம் ஒன்​றில் வரிசை வரிசை​யாக நூற்​றுக்​கணக்​கான கல்​லறை​கள் தோண்​டப்​பட்​டு, சுண்​ணாம்​புப் பொடி​யால் அடை​யாளமிடப்​பட்​டுள்​ளன

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், ‘‘அமெரிக்க – இஸ்​ரேல் குண்​டு​வீச்​சில் கொல்​லப்​பட்ட மாணவிகள் உள்ளிட்டோருக்​காக இந்​தக் கல்​லறை​கள் தோண்​டப்​படு​கின்​றன.

அவர்​களின் உடல்​கள் சிதறிப் போயுள்​ளன. காசா முதல் மினாப் வரை அப்​பாவி மக்​கள் ஈவு இரக்​கமின்றி படு​கொலை செய்​யப்​படு​கின்​றனர்’’ என குறிப்​பிட்​டுள்​ளார்.

இந்தத் தாக்​குதலுக்கு உள்​ளான பள்​ளி​யில் மீட்​புப் பணி​யாளர்​கள் சிதைந்த கான்​கிரீட் இடி​பாடு​களுக்கு இடையே தேடு​தல் நடத்​து​வதும், அங்​கிருந்து பள்​ளிப் பைகள் மீட்​கப்​படு​வதும் வீடியோக்​களில் பதி​வாகி​யுள்​ளன.

ஐக்​கிய நாடு​கள் சபை​யில் இதுகுறித்து முறை​யிட்​டுள்ள ஈரான், பொது​மக்​கள் மீதான திட்​ட​மிட்ட தாக்​குதல் இது என்​றும், இதனை ‘போர்க்​குற்​றம்’ மற்​றும் ‘மனிதகுலத்​துக்கு எதி​ரான குற்​றம்​’ என்​றும்​ சாடியுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here