பிப்ரவரியில் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் முழு ஊதியம் வழங்குக: கவுரவ விரிவுரையாளர்கள் வேண்டுகோள்

0
20

போராட்ட நாட்​களை பணி நாட்​களாக ஈடு​செய்ய பிப்​.26 முதல் தின​மும் கூடு​தலாக 2 முதல் 3 மணி நேரம் வரை பணி​யாற்​று​வ​தால் பிப்​ர​வரி மாதத்​துக்கு முழு ஊதியம் வழங்க வேண்​டும் என்று முதல்​வருக்கு கவுரவ விரிவுரை​யாளர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு அரசு கலைக் கல்​லூரி யுஜிசி தகு​தி பெற்ற கவுரவ விரிவுரை​யாளர்​கள் சங்​கத்​தின் மாநில தலை​வர் ஜி. சிவகு​மார் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: சம வேலைக்கு சம ஊதியம், மாதம் ரூ.57,700 வீதம் 12 மாத கால ஊதியம், பெண் கவுரவ விரிவுரை​யாளர்​களுக்கு ஊதி​யத்​துடன் கூடிய மகப்​பேறு விடுப்​பு உள்ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தமிழ்​நாடு அரசு கல்​லூரி கவுரவ விரிவுரை​யாளர்​கள் கூட்​டமைப்​பின் சார்​பில் வகுப்​பு​களை புறக்​கணித்து கடந்த பிப்.9 முதல் கல்​லூரி அளவிலும் அதைத்​தொடர்ந்து சென்​னை​யில் உள்ள கல்​லூரி கல்வி ஆணை​யர் அலு​வல​கத்​தில் தொடர் காத்​திருப்​புப் போராட்​டத்​தி​லும் ஈடு​பட்​டனர்.

தொடர்ந்து 17 நாட்​கள் போராட்​டம் நடந்​தது. அப்​போது, 12 மாத ஊதியம் வழங்​கப்​படும் என அமைச்​சர் வாக்​குறுதி அளித்​த​தால் தற்​காலிக​மாக போராட்​டத்தை கைவிட்டு பிப்​.26 முதல் பணிக்​குத் திரும்​பினர். தொடர் போராட்​டத்​தின் விளை​வாக கவுரவ விரிவுரை​யாளர்​களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க முதல்​வர் உத்​தர​விட்டு அதற்​கான அரசாணை​யும் வெளி​யிடப்​பட்​டது.

மிகக் குறைந்த ஊதி​யத்​தில் பணி​யாற்​றும் நிலை​யில் போராட்​டக் காலத்​துக்​கான ஊதியம் 17 நாட்​களுக்கு ரூ.15,179 பிடித்​தம் செய்​யப்​பட்​டால் கவுரவ விரிவுரை​யாளர்​கள் மிகுந்த பொருளா​தார நெருக்​கடிக்கு தள்​ளப்​படு​வர்.

எனவே, போராட்ட நாட்​களை ஈடு​ செய்​யும் பொருட்டு பிப்​.26 முதல் கூடு​தலாக 2 முதல் 3 மணி நேரம் வரை பணி​யாற்றி வரு​வ​தால் பிப்​ர​வரி மாதத்​துக்​கான முழு ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்க ஆணை​யிடு​மாறு தமிழக முதல்​வருக்​கு வேண்​டு​கோள்​ விடுக்​கிறோம்​. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here