கடற்கரை – எழும்பூர் 4-வது ரயில் பாதை: பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

0
15

தமிழகத்​தில் ரூ.378 கோடி​யில் 8 அம்​ரித் பாரத் நிலை​யங்​கள் திறப்பு மற்​றும் கடற்​கரை – எழும்​பூர் 4-வது பாதை நாட்​டுக்கு அர்ப்​பணிப்பு ஆகிய ரயில் திட்​டங்​களை பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார்.

பிரதமர் நரேந்​திர மோடி, மதுரை​யில் பல்​வேறு உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களை நேற்று தொடங்கி வைத்​தார். இவற்​றில், ரயில்வே துறை​யில் ரூ.378 கோடி மதிப்​பில், மேம்​படுத்​தப்​பட்ட 8 அம்​ரித் பாரத் ரயில் நிலை​யங்​களை திறந்து வைத்​தார். சென்னை எழும்​பூர் – கடற்​கரை 4-வது ரயில் பாதையை நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார்.

இதுகுறித்​து, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ், மேம்​படுத்​தப்​பட்ட பொம்​மிடி, காரைக்​குடி, மணப்​பாறை, மொரப்​பூர், பொள்​ளாச்​சி, சோழ​வந்​தான், வில்​லிபுத்​தூர், திரு​வாரூர் ஆகிய 8 ரயில் நிலை​யங்​களை திறந்து வைத்​தார்.

பொம்​மிடி ரயில் நிலை​யத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், மத்​திய ரயில்வே மற்​றும் ஜல் சக்​தித் துறை இணை​யமைச்​சர் வி. சோமண்​ணா, மூத்த ரயில்வே அதி​காரி​கள் உள்பட பலர் பங்கேற்றர்.

இந்த 8 ரயில் நிலை​யங்​கள் ரூ.105 கோடி செல​வில் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இந்த ரயில் நிலை​யங்​களில் நடைமேடைகள், காத்​திருப்​போர் அறை, கழி​வறை​கள் ஆகியவை மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

மின்​தூக்​கி, நகரும் படிக்​கட்​டு, பார்க்​கிங் வசதி, பயணி​கள் தகவல் அமைப்பு உள்பட பல்​வேறு வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. 4.3 கி.மீ. தொலை​வில் சென்னை கடற்​கரை – எழும்​பூர் 4-வது பாதை நாட்​டுக்கு பிரதமர் அர்ப்​பணித்​தார்.

இப்​பாதை ரூ.273 கோடி​யில் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இப்​பாதை மூல​மாக, கூடு​தலாக பயணி​கள் மற்​றும் சரக்கு சேவை​கள் வழங்க முடி​யும்​. இவ்​வாறு அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here