அரசு பல் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பு: நோயாளிகள் அவதியடைவதாக குற்றச்சாட்டு

0
15

தமிழகத்​தில் சென்​னை, புதுக்​கோட்​டை, சிதம்​பரத்​தில் தலா ஓர் அரசு பல் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கின்​றன. இவை தவிர அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, மாவட்ட, தாலு​கா, மருத்​து​வ​மனை​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் பல் மருத்​து​வப் பிரிவு​கள் உள்​ளன.

மொத்​தம் 565 அரசு பல் மருத்​து​வர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். மேலும் 400-க்​கும் மேற்​பட்ட பல் மருத்​து​வர்​கள் ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்றி வரு​கின்​றனர். சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந்​தரம் செய்​யப்​ப​டாத​தால், அவர்​கள் 15 ஆண்​டு​களுக்கு மேலாக குறைந்த ஊதி​யத்​தில் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

மற்​றொரு புறம், அரசு பல் மருத்​து​வர்​களுக்கு 2014 முதல் பதவி உயர்வு கலந்​தாய்வு நடத்​தப்​பட​வில்​லை. சென்​னை​யில் உள்ள தமிழ்​நாடு அரசு பல் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் 5 துறை​களுக்கு மட்​டும் 2023 வரை மட்​டும் பதவி உயர்வு கலந்​தாய்வு நடத்​தப்​பட்​டுள்​ளது.

தமிழகம் முழு​வதும் ஏராள​மான உதவி, இணை பேராசிரியர்​கள், பேராசிரியர்​கள் மற்​றும் பல் மருத்​து​வர் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக புதி​தாக பல் மருத்​து​வர்​களுக்கு பணி நியமனம் வழங்​கப்​பட​வில்​லை.

கீழ்ப்​பாக்​கம், தரு​மபுரி, சிவகங்கை உள்​ளிட்ட 5 அரசு மருத்​து​வக் கல்​லூரி​களி​லிருந்து 5 பல் மருத்​து​வர்​கள் மீள் பணி நியமனம் மூலம் தாம்​பரம் சாட்​டிலைட் பல் மருத்​து​வ​மனைக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். திரு​வாரூர் மற்​றும் ராம​நாத​புரம் அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் பல் மருத்​து​வத் துறை மூடப்​பட்​டுள்​ளது.

நோயாளி​களின் எண்​ணிக்கை அதி​கரித்​துள்ள நிலை​யில், பணி​யிடங்​கள் குறைப்​பு, புதிய நியமனங்​கள் இல்​லாத​தால் பல் மருத்​து​வர்​களுக்கு பணிச்​சுமை அதி​கரித்​துள்​ளது. இதனால் நோயாளி​களும் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர்.

இது தொடர்​பாக அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை கூறிய​தாவது: அரசு மருத்​து​வ​மனை​களுக்கு வரும் நோயாளிகள் எண்​ணிக்கை 3 மடங்​காக அதி​கரித்​துள்ள நிலை​யில், பல் மருத்​து​வர் பணி​யிடங்​களை குறைப்​பது எந்த வகை​யில் நியா​யம்.

அதே​போல், அரசாணை 293 மூலம் தரப்​படும் ஊதி​யப் படிகள் இது​வரை பல் மருத்​து​வர்​களுக்கு மட்​டும் தரப்​பட​வில்​லை. ஏற்​கெனவே நாட்​டிலேயே தமிழகத்​தில்​தான் அரசு மருத்​து​வர்​கள் மற்​றும் பல் மருத்​து​வர்​களுக்கு மிக​வும் குறை​வான ஊதி​யம் தரப்​படு​கிறது.

அரசு பல் மருத்​து​வர்​கள் பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர்​களுக்கு பணி நீட்​டிப்பு செய்​வதை ரத்து செய்ய வேண்​டும். பல் மருத்​து​வர்​களுக்கு பதவி உயர்வு கலந்​தாய்வு நடத்த வேண்​டும்.

மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூலம் புதிய பணி​யிடங்​களில் பல் மருத்​து​வர்​களை நியமிக்க வேண்​டும். கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை உட்பட குறைக்​கப்​பட்ட பல் மருத்​து​வர் பணி​யிடங்​களை மீண்​டும் உரு​வாக்க வேண்​டும்.

அரசு மருத்​து​வர்​களுக்கு அரசாணை 293-ன் மூலம் தரப்​பட்ட ஊதி​யப்​படிகளை அனைத்து பல் மருத்​து​வர்​களுக்​கும் வழங்க வேண்​டும். அனைத்து அரசு மருத்​து​வ​மனை மற்​றும் ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் பல் மருத்​து​வர்​கள் பணி​யிடங்​களை உரு​வாக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here