இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸி.

0
27

இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி ஆஸ்திரேலியா​வில் சுற்​றுப்​யணம் செய்து விளை​யாடி வருகிறது. இரு அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் உள்ள ஓவல் மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்புக்கு 251 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 70 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 54 ரன்​களும் பிர​திகா ராவல் 81 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​களும் சேர்த்​தனர். ஸ்மிருதி மந்​தனா 31, ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 11, தீப்தி சர்மா 1, அமன்​ஜோத் கவுர் 13, ரிச்சா கோஷ் 22, கஷ்வி கவுதம் 25, கிரந்தி கவுடு 19 ரன்​கள் எடுத்​தனர்.

ஆஸ்​திரேலிய அணி சார்​பில் ஆஷ்லே கார்ட்​னர், அனாபெல் சுதர்​லேண்ட், அலானா கிங் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 252 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்​திரேலிய மகளிர் அணி 36.1 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 252 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

ஜார்​ஜியா வால் 82 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 13 பவுண்​டரி​களு​டன் 101 ரன்​களும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 62 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 11 பவுண்​டரி​களு​டன் 80 ரன்​களும் விளாசினர். 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்​டித் தொடரை 2-0 என கைப்​பற்​றியது.

முதல் போட்​டி​யில் அந்த அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. இந்​தி​யா​வுக்கு எதி​ராக இருதரப்பு ஒரு​நாள் போட்​டித் தொடரை ஆஸ்​திரேலிய அணி வெல்​வது இது 12-வது முறை​யாகும். அந்த அணி ஒரு​முறை கூட இந்​தி​யா​விடம்​ தொடரை இழக்​க​வில்​லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here